அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

“உங்கள் வீட்டு மூத்த பிள்ளையாக என்னை நினையுங்கள்!” – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  பிரச்சாரம்

திருச்சியில் அடகு நகையை விற்க

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரும், அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனது தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவெறும்பூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அசூர், பொய்கைகுடி மற்றும் பழங்கனாங்குடி ஊராட்சியைச் சேர்ந்த அரவக்குறிச்சிபட்டி, வடக்கு தேனீர்பட்டி, தெற்கு தேனீர்பட்டி ஆகிய பகுதிகளில் அவர் வீதி வீதியாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

சாதனைகளைச் பட்டியலிட்ட அமைச்சர்:

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ், கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைச் சுட்டிக்காட்டினார்:

மக்களின் வாக்கு தந்த மாற்றம்: “நீங்கள் அளித்த ஒற்றை வாக்கின் பலனாகத்தான் விடியல் பயணத் திட்டம் (மகளிர் இலவசப் பேருந்து பயணம்) மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள் சாத்தியமானது.”

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

காலை உணவுத் திட்டம்:

“தமிழகம் முழுவதும் சுமார் 20 லட்சம் பள்ளி குழந்தைகள் காலை உணவு அருந்திவிட்டு பள்ளிக்குச் செல்கிறார்கள். என்னை வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்பியதன் மூலம், இந்த மகத்தான திட்டத்தில் உங்களின் பங்கும் உள்ளது.”

வளர்ச்சிப் பணிகள்:

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

“அசூர் ஊராட்சியில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் ₹1 கோடியே 65 லட்சத்து 8,914 மதிப்பீட்டில் பல்வேறு மக்கள் நலப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள சாலைப் பணிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் விரைந்து முடிக்கப்படும்.”

தேர்தல் வாக்குறுதிகள்:

தமிழக முதல்வர் சொன்னதைச் செய்வார் என்று குறிப்பிட்ட அமைச்சர், மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும் பின்வரும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என உறுதியளித்தார்:

மகளிர் உரிமைத் தொகை ₹1,000-லிருந்து ₹2,000 ஆக உயர்த்தப்படும். முதியோர் உதவித்தொகை ₹2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். காலை உணவுத் திட்டம் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படும்.

உருக்கமான வேண்டுகோள்:

பிரச்சாரத்தின் நிறைவாக அவர் பேசுகையில், “என்னை வெறும் அமைச்சராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ பார்க்காதீர்கள். உங்கள் வீட்டு மூத்த பிள்ளையாகக் கருதி, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள்:

இந்நிகழ்வில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் கும்பக்குடி கங்காதரன், கிளைச் செயலாளர் பரமசிவம் முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவர் சண்முகம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் குண்டூர் மாரியப்பன், அவைத் தலைவர் பரமசிவம், இழந்தபட்டி மாரிமுத்து, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பழங்கனாங்குடி சுதாகர், பொய்கைகுடி மணி, பெல் ஜெகதீசன், கும்பக்குடி சங்கர், கயல்விழி மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.