அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நாற்பது வருசமா உங்களோட இருக்கேன் … ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் மனோகரன் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி – ஸ்ரீரங்கம் தொகுதியில், அ.தி.மு.க. வேட்பாளராக களம் காணும் முன்னாள் அரசு கொறடா ஆர்.மனோகரன், ஏப்ரல்-11 அன்று ஸ்ரீரங்கம் தெற்கு சாத்தார வீதி, வடக்கு சாத்தார வீதி,  அடையாளஞ்சான் வீதி, மாணிக்கம் பிள்ளை தெரு, வ.உ. சி. தெரு, மூலத்தோப்பு, மலையப்பன் நகர், அண்ணா நகர், ராகவேந்திரபுரம், சரஸ்வதி கார்னர், ராகவேந்திரா அவன்யூ ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஏற்கெனவே, எம்.எல்.ஏ.வாகவும் அரசு கொறடாவாகவும் பணியாற்றிய அரசியல் அனுபவமிக்க வேட்பாளராக, எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி நிதானமாக மக்களிடம் தங்களது கட்சியின் சார்பான நிலைப்பாடுகளை எடுத்துக்கூறி அரசியல் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

manoharan”இந்த ஊர்ல என்னென்ன பிரச்சினை இருக்குன்னு எனக்கு நல்லாவே தெரியும். முனிசிலிபாட்டியா இருந்த காலத்திலிருந்து திருச்சி மாநகராட்சியாக மாறிய காலம் வரையில் நல்லா தெரியும். எனது நாற்பது ஆண்டு கால பொது வாழ்வில், பல்வேறு பொறுப்புகளை வகித்து, உங்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைத்திருக்கிறேன். உங்களோடுதான் இதுவரை பயணப்பட்டிருக்கிறேன். மேலும், இந்த தொகுதியில் சில பிரச்சினைகளை முன்வைத்திருக்கிறார்கள். அதையும் சரிசெய்வேன்.” என்பதாக பேசினார்.

இந்த பிரச்சாரத்தின்போது, ஸ்ரீரங்கம் பகுதி கழக செயலாளர் சுந்தர்ராஜன், திருவானைக்கோவில் பகுதி கழக செயலாளர் திருப்பதி,  பா.ஜ.க.  ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் முரளிதரன், ஸ்ரீரங்க மண்டல தலைவர்  சதீஷ், த.மா.கா. மாவட்ட தலைவர் தனபால், பாட்டாளி மக்கள் கட்சி ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் சந்தோஷ் சேதுராமன், வட்டக் கழக செயலாளர்கள் செந்தில் மற்றும் மெக்கானிக் சேகர், மனோகர் , மாவட்ட மீனவர் அணி செயலாளர் கண்ணதாசன், சாத்தனூர் வாசு மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் செயலாளர்கள், நிர்வாகிகள் மாவட்ட சார்பணி செயலாளர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் இப்பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.

யாவரும் கேளீர்

—    அங்குசம் தேர்தல் செய்திக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.