கார்த்தியின்  ‘வா வாத்தியார்’  டீஸர் ரிலீஸ்!

0

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘வா வாத்தியார்’.  இதில் கார்த்தியுடன் சத்யராஜ், ராஜ்கிரண், கீர்த்தி ஷெட்டி, ஆனந்த் ராஜ், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜி. எம். சுந்தர், ரமேஷ் திலக், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு,  சந்தோஷ் நாராயணன் இசை, ஆர்ட் டைரக்டர் டி. ஆர். கே. கிரண், எடிட்டிங் பணிகளை வெற்றி,  சண்டை காட்சிகளை  அனல் அரசு அமைத்திருக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.  ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.

படத்தின் அனைத்துப் பணிகளும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்போது டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கார்த்தியின் தோற்றமும்  டீஸர் காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதால் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

 

— மதுரை மாறன்.

 

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

Leave A Reply

Your email address will not be published.