அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘வடம்’   

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

தயாரிப்பு : மாசாணி பிக்சர்ஸ் ராஜசேகர், டைரக்டர் : கேந்திரன் வி. ஆர்ட்டிஸ்ட் : விமல், சன்ஸ்கா ஸ்ரீ, நட்டி[எ] நட்ராஜ், முனீஸ்காந்த், ‘ஆடுகளம்’ நரேன், பாலசரவணன், மதுசூதன் ராவ், டைரக்டர் மூர்த்தி, இந்துமதி, தீபா சங்கர், ஒளிப்பதிவு : பிரசன்னா எஸ்.குமார், இசை : டி.இமான், எடிட்டிங் : ஷாபு ஜோசப்,  பி.ஆர்.ஓ : சதீஷ் [ எஸ்-2]

வடம் movieசெய்யாத கொலைக்குற்றத்திற்காக ஜெயிலில் இருந்துவிட்டு ஜாமீனில் வருகிறார் விமல். கோர்ட்டுக்குள்ளேயே அவரைப் போட்டுத் தள்ள ஒரு கும்பல் பாய்கிறது. ஏன் இந்த கொலைவெறி? இதான் ‘வடம்’ படத்தின் கதை. டைரக்டர் கேந்திரனும் தயாரிப்பாளர் ராஜசேகரும் சேர்ந்து வடமஞ்சு விரட்டு காளையைப் பத்தி, அந்த காளையை வளர்க்கும் முறை பற்றித் தான் சொல்ல ஆசைப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் ஆசை பாதி தான் நிறைவேறியுள்ளது. படுவீக்கான திரைக்கதை தான் வடத்தை வலுவிலக்கச் செய்துவிட்டது. இதுக்கு மேல நாம விளக்கமா சொன்னா நல்லா இருக்காது.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

வடம் movieஹீரோ விமல் வழக்கம் போல் தூக்கம் கலையாமல் எந்திருச்சு வந்தவர் போல இருக்கிறார். ஆக்‌ஷன் சீக்வென்ஸில் ஃபயராக இருக்கிறார். அவ்வளவு தான். ஹீரோயின் சன்ஸ்கா ஸ்ரீ கருப்பா இருந்தாலும் லட்சணமாக இருக்கிறார். நடிப்பும் வருகிறது. இடைவேளை ட்விஸ்டுக்கு பயன்பட்டிருக்கிறார். க்ளைமாக்ஸில் வழக்கம் போல் பொசுக்குன்னு கண்ணீர்விட்டு விமலைக் கட்டிப் பிடிக்கிறார்கள். ஆடுகள் நரேன் நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் தான். ஆனா இந்தப் படத்தில் அவரின் நடிப்பு படு கொஞ்சம் செயற்கையாகத் தான் இருக்கு.  நட்டி வழக்கம் போல் எல்லா சீனில் முறுக்கிக் கொண்டு வெறுப்பேத்துகிறார். அங்கங்கே காமெடிக்கு பயன்பட்டுள்ளார் பாலசரவணன்.

Sowdambikaa Group Of Schools & Colleges In & Around ...

இமானின் இசை தான் வடத்தைக் கட்டி இழுக்கிறது. அதுவும் இல்லேன்னா கொஞ்சம் கஷ்டம் தான்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

‘வடம்’ இந்த வாரம் ரிலீசான படங்களில் ஒரு படம்.

அங்குசம் பார்வையில் ‘வடம்’    32/100

—    ஆண்டவர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.