வி.ஏ.ஓ. முதல் கலெக்டர் வரை – யாருக்கு என்ன வேலை?

குறுந்தொடர் – பாகம் - 01

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

பொதுமக்களுக்கு அரசுத் துறைகளில் மிகவும் முக்கியமான துறை வருவாய்த் துறை. நிலம், பட்டா, சிட்டா, அடங்கல், நில அளவை, உட்பிரிவு, அரசு நிலம், ஆக்கிரமிப்பு, வாரிசுச் சான்றிதழ், வருவாய் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் வருவாய்த் துறையுடன் தொடர்புடையவை. ஆனால், பலருக்கும் ஒரு சந்தேகம் இருக்கும். எங்கள் பிரச்சினைக்கு முதலில் யாரிடம் மனு கொடுக்க வேண்டும்? VAO-வா? RI-யா? தாசில்தாரா? RDO-வா?  கலெக்டரா? இதற்கான எளிய விளக்கம் இதோ.

  1. கிராம நிர்வாக அலுவலர் (VAO – Village Administrative Officer) :

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

கிராம நிர்வாக அலுவலர் (VAO) என்பவர் கிராம அளவில் பொதுமக்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்கும் முக்கியமான வருவாய் அலுவலர்.

VAO-வின் பணிகளில் கிராமத்தின் நிலங்கள், நிலப் பயன்பாடு, பயிர் நிலவரம் போன்ற களத்தகவல்களை பராமரித்தல் மற்றும் மேலதிகாரிகளுக்கு தேவையான அறிக்கைகளை வழங்குதல் அடங்கும்.

VAO-வை அணுகக்கூடிய விஷயங்கள்:

நிலத்தின் கள நிலவரம்; பயிர் மற்றும் நிலப் பயன்பாடு தொடர்பான தகவல்கள்; நில ஆக்கிரமிப்பு குறித்த ஆரம்ப தகவல்; அரசு நிலம் தொடர்பான உள்ளூர் தகவல்கள்; வாரிசு/குடும்ப நிலவரம் தொடர்பான விசாரணை; வருவாய்த் துறை அதிகாரிகள் கேட்கும் கள அறிக்கைகள்; கிராம அளவிலான வருவாய் தொடர்பான பிரச்சினைகள்.

ஆனால், ஒரு முக்கிய விஷயம். VAO சொத்தின் உரிமையை இறுதியாக தீர்மானிக்கும் நீதிமன்ற அதிகாரி அல்ல.

  1. வருவாய் ஆய்வாளர் (RI – Revenue Inspector) :

வருவாய் ஆய்வாளர் Revenue Inspector (RI) என்பது பொதுவாக ஒரு குறிப்பிட்ட வருவாய் பிரிவில் உள்ள கிராம நிர்வாகப் பணிகளை மேற்பார்வையிடும் அதிகாரி.

VAO அளவில் செய்யப்பட்ட பணிகள் மற்றும் கள நிலவரங்களை மேற்பார்வையிடுதல், தேவையான இடங்களில் கள ஆய்வு செய்தல், அறிக்கைகளை பரிசீலித்தல் போன்ற பணிகளில் RI முக்கிய பங்கு வகிக்கிறார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

RI-யை அணுக வேண்டிய சூழல்கள்:

VAO அளவில் பிரச்சினை தீராதபோது; கள ஆய்வு தேவைப்படும் போது; VAO அறிக்கையில் தவறு இருப்பதாக சந்தேகம் இருந்தால்; நிலத்தின் தற்போதைய நிலவரத்தை அதிகாரப்பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால் வருவாய் ஆய்வாளரை அணுகலாம்.

3 துணை வட்டாட்சியர் (Deputy Tahsildar )

அரசின் அதிகாரப் பகிர்வு மற்றும் குறிப்பிட்ட பணிப்பிரிவைப் பொறுத்து, வருவாய் விசாரணைகள் மற்றும் சான்றிதழ்/பதிவு தொடர்பான பணிகளில் இவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கலாம். எனவே, எந்த ஒரு குறிப்பிட்ட மனுவையும் கொடுக்கும் முன் அந்த விஷயத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதை தெரிந்து கொள்வது நல்லது.

  1. Tahsildar – வட்டாட்சியர்

பொதுமக்கள் அதிகமாக அணுகும் முக்கியமான வருவாய் அதிகாரி Tahsildar – வட்டாட்சியர். ஒரு தாலுகாவின் வருவாய் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு இவருக்கு உள்ளது.

தாசில்தாரிடம் தொடர்புடைய முக்கிய விஷயங்கள்:

பட்டா தொடர்பான நடவடிக்கைகள்;  பட்டா பெயர் மாற்றம்; வருவாய் பதிவுகள் தொடர்பான பிரச்சினைகள்;  அரசு நிலம் தொடர்பான நடவடிக்கைகள்; அரசு நில ஆக்கிரமிப்பு; நிலவரி தொடர்பான விஷயங்கள்; வருவாய் சான்றிதழ்கள்; குறிப்பிட்ட சட்டங்களின் கீழ் நடைபெறும் வருவாய் விசாரணைகள்; கீழ்நிலை அலுவலர்களிடமிருந்து அறிக்கை பெற்று நடவடிக்கை எடுப்பது ஆகியன.

அடுத்த பதிவில், RDO, DRO கலெக்டர் ஆகியோரின் கடமைகள் குறித்து காணலாம்.

தொடரும்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.