வயலூர் கற்றளி மகாதேவர் கோவில்
வயலூர் என்றதும் பலரும் அது முருகன் கோவில் என்றே எண்ணி வருகின்றனர். ஆனால் இம்முருகப் பெருமான் 15ம் நூற்றாண்டிற்கும் பிற்ப்பட்டவர் அருணகிரி நாதரால் பின்னாளில் பிரபல்யமானவர். ஆனால் இத்தலம் முதலாம் ஆதித்தன் கால சிவாலயம் என்பது பலரும் அறியாத ஒன்று. இக்கோவில் கல்வெட்டுகள் பல சுவாரஸ்ய தகவல்களை உள்ளடக்கியது.
இக்கோவில் அன்று தென்கரை பிரம்மதேயம் உறையூர் கூற்றத்து வயலூர் திருக்கற்றளி பெருமானடிகள் என்று வழங்கப்பெற்றது. 1936 ம் ஆண்டு 20 கல்வெட்டுகள் இக்கோவிலில் படியெடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
பராந்தகசோழரின் 41 ம் ஆட்சியாண்டில் (கி.பி.948) நந்திவர்ம மங்கல (இன்றைய உய்யக்கொண்டான் திருமலை) மத்தியஸ்தன் (ஊர் அதிகாரி) நாலாயிரத்து முன்னூற்றுவனான சந்திரசேகரன் அரமையிந்தன் என்பவர் 35 ஆண்டுகளாக கூழ் தானம் செய்யவும், ஈசனுக்கு சாமரசம்(கவரி) வீசவும், திருப்பதியம் எனும் தேவாரம் பாடவும் ஊரன் சோலை எனும் பெண்மணியையும், அவர் மகள் வேளான் பிராட்டியையும் அவர் மகள் அரமைய்ந்தன் கண்டி என்பவரையும், ஆக மொத்தம் பாட்டி, தாய், மகள் என மூன்று தலைமுறை பெண்களையும் திருப்பதிகம் பாட நியமித்துள்ள முக்கிய தகவலை கூறுகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அக்கல் வெட்டினையே மூலாதாரமாய்க் கொண்டு மீண்டும் பெண் ஓதுவார்களைக் கொண்டு பழைய நடைமுறையை வரும் கும்பாபிஷேகம் முதல் அமுல்படுத்தலாம்.
– திருச்சி பார்த்தி.