ப்ளீச்சிங் பவுடர் கலந்த குடிநீர் ! பள்ளி குழந்தைகள் 16 பேர் பாதிப்பு ! மருத்துவமனையில் பெற்றோர் ஆவேசம் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ப்ளீச்சிங் பவுடர் கலந்த குடிநீரை குடித்த 16 குழந்தைகளுக்கு தொண்டை எரிச்சல் காரணமாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி பெற்றோர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டி  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

இன்று மதிய உணவுக்கு பிறகு பள்ளியின் குடிநீர் தொட்டியில் இருந்த குடிநீரை குடித்துள்ளனர். குடித்த சில நேரத்தில் குழந்தைகளுக்கு தொண்டை எரிச்சல், கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் அழுதுள்ளனர். உடனடியாக அங்கிருந்த ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்த்துள்ளனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இதனை அடுத்து 16 குழந்தைகளை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதை அறிந்த பெற்றோர்கள் பதட்டத்துடன் மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது  அங்கிருந்த ஆசிரியர்கள் காவல்துறையினரிடம் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்ப்பட்டவுடன் பெற்றோர்களுக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

பிளீச்சிங் பவுடர் தூவி குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யப்பட்டுள்ளதை குழந்தைகளிடம்  ஆசிரியர்கள் தெரிவித்து இருந்தால் அந்த தண்ணீரை குழந்தைகள் குடித்திருக்க மாட்டார்கள். 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் பள்ளியில் இரண்டே ஆசிரியர்கள் தான் உள்ளார்கள் என பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.

பிளீச்சிங் பவுடர் கலந்த குடிநீரை குடித்ததால் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. தற்போது குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது நல்ல நிலையில் குழந்தைகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.