30.08.2026 குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது தரை மட்ட நீர் தேக்க தொட்டி நீரேற்று நிலையங்களுக்கு திருவரங்கம் (110 / 11 KV) துணை மின் நிலையத்திலுருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இந்நிலையில் திருவரங்கம் (110/11 KV) துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 29.08.2026 அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடை பெற இருப்பதால் மேற்கண்ட நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான மத்திய சிறைச்சாலை, சுந்தராஜநகர் புதியது, சுந்தராஜநகர் பழையது, ஜே.கே.நகர், செம்பட்டு, காஜாமலை பழையது, ரெங்கா நகர், சுப்ரமணிய நகர் புதியது, வீ என் நகர் புதியது, தென்றல் நகர் புதியது, கவி பாரதி நகர்,காமராஜ் நகர்,கிராப்பட்டி புதியது, கிராப்பட்டி பழையது, அன்பு நகர் பழையது, அன்பு நகர் புதியது, எடமலைப்பட்டி புத்தூர் புதியது, பஞ்சப்பூர், அம்மன் நகர், தென்றல் நகர் E.B.காலனி, அரியமங்கலம் கிராமம், மலையப்ப நகர் புதியது, மலையப்ப நகர் பழையது, ரயில் நகர் புதியது, ரயில் நகர் பழையது, முன்னாள் ராணுவத்தினர் காலனி புதியது, முன்னாள் ராணுவத்தினர் காலனி பழையது, M.K.கோட்டை செக்ஸன் ஆபீஸ், M.K.கோட்டை நாகம்மை வீதி, M.K.கோட்டை நூலகம், பொன்னேரிபுரம் புதியது, பொன்னேரிபுரம் பழையது, அம்பேத்கார் நகர், விவேகானந்த நகர், LIC புதியது, விஸ்வநாதபுரம், கே. சாத்தனுர், தென்றல் நகர், ஆனந்த நகர், சுப்ரமணிய நகர், சத்தியவாணி கே கே நகர், அம்மா மண்டபம், AIBEA நகர், பாலாஜி ஆவின்யூ, தேவி பள்ளி மேலூர், பெரியார் நகர், T.V.கோவில், தேவதானம், விறகுப்பேட்டை, மகாலட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை தெற்கு உக்கடை, ஜெகநாதபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளில் குடிநீர் விநியோகம் 30.08.2026 ஒரு நாள் இருக்காது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

31.08.2026 அன்று முதல் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனவே பொது மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.