அங்குசம் சேனலில் இணைய

படிக்கும் போதே கோட்டு சூட்டு போட்டோம் ! உணவக மேலாண்மை தொடர் – 3

உணவக மேலாண்மை தொடர் - 3

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

படிக்கும் போதே கோட்டு சூட்டு போட்டோம் ! உணவக மேலாண்மை தொடர் – 3  படித்து முடித்து வேலைக்குப்போயி பெரிய ஆளாகி கோட்டு சூட்டு போட்டு ‘டை’ எல்லாம் கட்டணும்னு பல பேருக்கு ஆசை இருக்கும். ஆனால் படிக்கும் போதே ‘டை’ கட்டி அழகு பார்க்கும் படிப்புதான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் & கேட்டரிங் டெக்னாலஜி.

அறிமுக வகுப்பு எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் சீருடை அறிமுகப்படுத்தினாங்க. அதுல முக்கியமா ‘டை’ கட்ட சொல்லிக் கொடுத்து ஷூ எல்லாம் போட்டு அழகு பார்த்தாங்க, என்ன மாதிரி பலபேர் அப்போதான் முதல் முறையாக ஷூ போட்டோம், அதுக்கு முன்னாடி ரப்பர்செருப்பு தான் போட்டு இருந்தோம். டிப்டாப்பா எங்களை நாங்களே பார்க்கவும் எங்களுக்கு அந்த படிப்பு மேல ஒரு ஈடுபாடு அதிகமாயிடுச்சு.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

ஹோட்டல் மேனேஜ்மென்ட் & கேட்டரிங் டெக்னாலஜின்னாலே ‘சாப்பாடு’ தான் நமக்கு நினைவு வரும். சமையல் ஒரு கலைங்கறது எல்லாருக்கும் தெரிஞ்சது தான். அப்படிப்பட்ட சமையல் சமைக்கிறதுக்கு முன்னாடியும் பின்னாடியும் சுத்தமா இருக்கணும்னு எங்களுக்கு சொல்லிக் கொடுத்தாங்க.

ஒருமுறை சமைத்து முடிச்சதுக்கப்புறம் என்னுடைய அடுப்பை சுத்தம் பண்ணிட்டு இருந்தேன். பக்கத்துல இருக்கிற அடுப்பைவிட்டுட்டு சுத்தம் பண்ணிட்டு இருந்ததை பார்த்த ஆசிரியர், ‘அதை ஏன் விட்டுட்டேன்னு’ கேட்டார். ‘அது பக்கத்து டேபிளில் இருக்கும் இன்னொருவருடையது, அவன் பண்ணுவான்னு’ சொன்னேன். அதுக்கு தண்டனையா அங்கிருந்த 30 அடுப்பையும் கழுவ விட்டார் ஆசிரியர். உன்னுது என்னுதுன்னு எதையும் பிரிக்கக்கூடாது,  எல்லாமே நம்மளோட இடம்தான்னு சுத்தப்படுத்தனும் அப்படின்னு கத்துகிட்டேன். அதனால இன்னைக்கும் ஒற்றுமையா ஒரு அணியாக செயல்பட முடிகிறது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

சமையல் இல்லாமல் எங்களுக்கு இன்னும் நிறைய பாடங்கள் இருக்கு, மரியாதை, சாதுரியம் அப்படிங்கறது பற்றி ஒரு அத்தியாயமே ‘சர்வீஸ்’ அப்படிங்கற பாடத்தில் இருக்கு, சமைக்கிறது எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட முக்கியம் அதை பரிமாறுவது. இன்முகத்தோடு பரிமாறினால் தான் சாப்பிடுவது நன்றாக இருக்கும்,

மோப்பக்குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக்குழையும் விருந்து‘  அப்படின்னு சொல்லி இருக்கார் வள்ளுவர். எங்களுக்கு படிக்கும் போது நிறைய பேருக்கு ஸ்டார் ஹோட்டல் மட்டும்தான் தெரியும். அது இல்லாமல் மற்ற நிறைய வேலைவாய்ப்புகள் இன்னைக்கு வந்து இருக்கு. இருந்தாலும் நாம ஸ்டார் ஹோட்டல்ல என்னென்ன வேலைவாய்ப்புகள் இருக்குன்னு முதலில் பார்ப்போம்.

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

ஸ்டார் ஹோட்டல்ல கிச்சன், சர்வீஸ், ஃப்ரண்ட் ஆபீஸ், ஹவுஸ்கீப்பிங், ட்ரெய்னிங், பர்ச்சேஸ், பைனான்ஸ், ஹெச்ஆர், சேல்ஸ்&மார்க்கெட்டிங், செக்யூரிட்டி அப்படின்னு பல துறைகளிலும் வேலை செய்ய வாய்ப்பு இருக்கு. இதில் முதல் நான்கு துறைகளில் வேலை செய்வதற்கு, படித்த உடனே வேலை செய்யலாம், மற்ற துறைகளில் வேலை செய்வதற்கு கொஞ்சம் அனுபவமோ அல்லது அது சம்பந்தமான இன்னொரு கூடுதல் படிப்போ இருந்தால் சுலபமா நமக்கு வேலை கிடைக்கும்.  அப்போ வெறும் சமையல் மட்டுமே இல்லாமல் வேலைவாய்ப்புகள் பல துறைகளில் கொட்டிக்கிடக்கு… என தொடர்ந்து பார்ப்போம்

Food Production, Food &Beverage Service, Front office, Housekeeping, Hotel Engineering, Communication, Food Science & Nutrition, Computer applications, Principles of Management, Sales and Marketing, Hotel accountancy, Industrial Training, Research Project, Facility planning, Food & Beverage Management  என ஹோட்டலுக்கும் வாழ்க்கைக்கும் தேவையான அனைத்து பாடங்களும் இருக்கிறது. ‘ஹோட்டல் சட்டம்’ என்ற பாடம் கூட எங்களது படிப்பில் இருந்தது. இடையில் 6 மாதம் நிறுவனத்தில் பயிற்சி செய்யும் முறையும் உள்ளது. அதனால் எங்களுக்கு எந்த வேலையை செய்வதற்கும் எளிதாக உள்ளது.

-தமிழூர் இரா.கபிலன்

 

இங்கிலீஷ் கற்றுத் தந்த படிப்பும் பாடமும்…! உணவக மேலாண்மை தொடர் -2

இங்கிலீஷ் கற்றுத் தந்த படிப்பும் பாடமும்…! உணவக மேலாண்மை தொடர் -2

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.