திருச்சி ஏர்போர்ட்டிலிருந்து வெளிநாடு பயணமா..? தொடரும் குற்றச்சாட்டுகள்..

-உபயதுல்லா

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பொன்று இந்திய விமானத்துறை வரலாற்றையே புரட்டிப்போட்டது என்று சென்ற இதழில் சொன்னேன் அல்லவா..? அது இது தான்.

“குடியேற்ற அனுமதி தொடர்பான ECRS நடைமுறைகளை முற்றிலும் நீக்குதல் “(Abolition of the Procedure of Emigration Check Required Suspension (ECRS) with effect from 1.10.07) என்பதே அந்த அரசாணையாகும்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனைப்படி, அன்றைய வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான அமைச்சகத்தின் அமைச்சர் வயலார் ரவி வெளியிட்ட அந்த அற்புதமான அரசாணை வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சியில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள, இந்திய விமானத்துறைக்கு உயிரோட்டம் கொடுத்து மறுமலர்ச்சியை ஏற்படுத்திய, இன்று வெற்றிகரமாய் இந்திய வான்வெளியில் சேவைவழங்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் கோ ஏர் போன்ற விமானநிறுவனங்களுக்கு தளம் அமைத்துக் கொடுத்த,குறிப்பாக குறைந்த கட்டண சேவை நிறுவனங்கள் (Low Cost Carriers – LCC’s) அனைத்திற்கும் உலகளாவிய  வணிகத்தளம் அமைத்துக் கொடுத்த ஒரு அரசாணையாக விளங்கியது.

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

இந்த அரசாணையின்படி, “1.10.2007 முதல் ECR பாஸ்போர்ட் வைத்துள்ள அனைத்துப் பயணிகளும், வேலைவாய்ப்பு விசா தவிர்த்த எவ்வகை பயணத்திற்கும், செல்லத்தக்க பாஸ்போர்ட், செல்லத்தக்க விசா, திரும்பு பயணச்சீட்டு போன்றவற்றை விமானநிலைய குடியேற்றப்பிரிவில் (Airport Immigration) காண்பித்துவிட்டு பயணிக்கலாம். பயணிகள் பயணம் செய்யும் நாடு மற்றும் அங்கு தங்கும் கால அளவு போன்றவற்றை விமானநிலைய குடியேற்றப்பிரிவு (Bureau of Immigration) பராமரிக்கவேண்டும்.” என்பதே இந்த அரசாணையின் சாராம்சமாகும்.

3

அதாவது இந்த அரசாணையின்படி, ECR பாஸ்போர்ட் வைத்திருப்பவர், வேலைவாய்ப்பு(Employment) விசா தவிர்த்து மற்ற அனைத்து வகை விசாவிற்கும், ECNR பாஸ்போர்ட் வைத்திருப்பவர் போன்றே POEன் ECRS அனுமதி இன்றி வெளிநாடுகளுக்குச் செல்லலாம்.

ECR பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் வேலைவாய்ப்பு விசாவில் வெளிநாடுகளுக்கு செல்லும்போது மட்டும் POEன் அனுமதி தேவை. அதுவும் அனைத்து நாடுகளுக்கும் அல்ல. குடியேற்ற அனுமதி  தேவைப்படும் நாடுகளுக்கு மட்டுமே.

4

இந்த அரசாணை வெளியிடப்பட்டதன் நோக்கமே, வெளிநாடு செல்வோர் சிரமமின்றி எளிதாக பயணிக்கவேண்டும் என்பதாகும். அத்துடன் கணக்கிலடங்கா நேர்மறை விளைவுகளை இந்த அரசாணையானது இந்திய விமானத்துறையில் ஏற்படுத்தியது. இந்த அரசாணை வெளியிடப்பட்ட நிதியாண்டான 2007-08ல் இந்திய விமான நிலையங்கள் கையாண்ட பன்னாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 2.98 கோடி ஆகும். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக குறைந்தது 10% பன்னாட்டு விமானப்பயணிகள் வளர்ச்சி இருந்து வருகிறது.

கடந்த 2017-18 நிதியாண்டில் இந்திய விமானநிலையங்கள் கையாண்ட பன்னாட்டு விமானப் பயணிகள் 6.55 கோடி ஆகும். அதாவது இந்த “குடியேற்ற அனுமதி தொடர்பான நடைமுறைகளை முற்றிலும் நீக்குதல் (Abolition of the procedure of ECRS)”அரசாணைக்குப் பின்னர் கடந்த 11 ஆண்டுகளில் இந்திய வானில் பன்னாட்டு பயணிகள் 120% (இருமடங்கிற்கு மேல்) அதிகரித்துள்ளனர்.

அதுமட்டுமன்றி, அனைத்து வளைகுடா நாடுகளின் விமானநிறுவனங்களும் இந்தியாவில் சேவைகளை அதிகப்படுத்தின. குறிப்பாக எமிரேட்ஸ், இத்திகாத், கத்தர் ஏர்வேஸ் மற்றும் ஓமன் ஏர். இதன்விளைவாக விமானப்பயணக் கட்டணங்களானது பயணிகளின் வாங்குதிறனை பாதிக்காத அளவில் கட்டுக்குள் வைக்கப்பட்டன. வணிகச்சந்தையானது ஆரோக்கியமான போட்டியில், சில சூழலில் பயணிகளுக்கே சாதகமான சூழலாக மாறியது.

இதனால் 2007க்கு சற்று முன்னதாக இந்தியாவில் தொடங்கப்பட்ட குறைந்த கட்டண விமானநிறுவனங்களான, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற விமானநிறுவனங்கள் வளைகுடா மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கு எளிதாக சேவைகள் தொடங்க (இருக்கைகள் அனுமதி)  அனுமதி கிடைத்தது. அதுமட்டுமன்றி வெற்றி பெறவும் முடிந்தது.

குறிப்பாக இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கிடையில் இன்றைய அளவில் உள்ள விமானசேவைகளில் வாரத்திற்கு 4 லட்சம் இருக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தளவுக்கு முக்கியமான வான்வழித்தடம் இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளுக் கிடையேயான வான்வழித்தடமாகும்.

இது இந்தியாவின் ஒட்டுமொத்த பன்னாட்டு விமானசேவையின் இருக்கைகள்  பயன்பாட்டை ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 50 சதவீதமாகும். இம்மாபெரும் வளர்ச்சிக்கு காரணமானது மேற்சொன்ன அரசாணையே! அதிகரித்த விமானப்பயணங்களால், இந்தியாவின் இரண்டாம்நிலை நகரங்களில் இருந்தும் வளைகுடா மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கு நேரடி விமானசேவைகள் கிடைத்தன.இரண்டாம்நிலை நகரங்களில் உள்ள விமானநிலையங்களுக்கு புதிய உயிரோட்டமும் உத்வேகமும் கிடைத்தது.

அடுத்த இதழில் தொடரும்…

 

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.