பிச்சை எடுத்தே கோடீஸ்வரர்கள் பிரமிக்க வைக்கும் சொத்து பட்டியல்

- மன்னை மனோகரன்

0

2011 தேசிய கணக்கெடுப்பின் மூலம் இந்தியாவில் 4,13,670 பிச்சைக்காரர்கள் இருப்பதும் அதில் ஆண் பிச்சைக்கார்ர்கள் 2,21,673 பேர், பெண் பிச்சைக்காரர்கள் 1,91,997 பேர் என தெரிய வந்தது. இவர்கள் நாடோடிகளாக கணக்கெடுக்கப்படுகிறார்கள். தற்போது இந்தியாவில் சுமார் 10 லட்சம் பிச்சைக்காரர்கள் இருக்கக் கூடும் என்கிறது ஆய்வுகள். இதுதவிர மூன்றாம் பாலினத்தவர்கள் பிச்சை எடுப்பது வேகமாக அதிகரித்து வருகிறது. வழிபாட்டுத்தல மத பிச்சைக்காரர்கள், நாடோடி பிச்சைக்காரர்கள், சுங்கச் சாவடி, ரயில், பஸ்நிலைய பிச்சைக்காரர்கள், சுற்றுலாதலங்கள், சுரங்கப்பாதைகள் போன்ற நிரந்தர இடத்து பிச்சைக்காரர்கள், நவீன ஆன்லைன் பிச்சைக்காரர்கள் என இவர்கள் பலவிதம்.   பிச்சை போடுவது, அன்னதானம் செய்வது, மூண்றாம் பாலினத்தவர்களுக்கு தர்மம்செய்வது புண்ணியம் போன்ற மத நம்பிக்கைகள் பிச்சை தொழிலை ஊக்குவிக்கவே செய்கின்றன.

நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் எம்.ஆர்.ஷா அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க மறுத்ததோடு சமூக பொருளாதார பிரச்சனை இது எனவும் தெரிவித்துவிட்டது. 20 மாநிலங்கள், ‘பிச்சை எடுப்பது குற்றம் ‘ என சட்டம் இயற்றியும் பலனில்லை. “பாத்திரம் அறிந்து பிச்சையிடு” என்பது கூட பிச்சை போடுவதை வலியுறுத்தும் வழக்குமொழியே. மக்களின் இரக்க குணமே பிச்சைக்காரர்களின் வருவாய்க்கான ஆதாரம். நோய், குடும்ப சூழல், படிப்பு தேவை எனச் சொல்லி எடுக்கும் ஆன்லைன் பிச்சைகள் நவீன ரகம்.

மும்பையில் பிச்சை எடுக்கும் பாரத் ஜெயின் தான் இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரன். இவனுக்கு மும்பை புறநகரில் இரண்டு அப்பார்டமெண்ட் உள்ளது. இவற்றின் மதிப்பு 2 கோடி. பந்தப் பகுதியில் ஒரு கடை. அதில் வாடகை வருகிறது. மாத பிச்சை வருமானம் ரூ.75,000 முதல் ரூ.90,000 வரை.

சர்வட்டியா தேவி என்ற பிச்சைக்காரி. இவளுக்கு பாட்னா அசோக் சினிமா பின்புறம் சொந்த அப்பார்ட்மென்ட். இவள் கட்டும் இன்சூரன்ஸ் பிரிமியம் ஆண்டுக்கு ரூ.36,000. இந்தியாவில் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று இருக்கிறாள். வீடு பேங்க் பேலன்ஸ் பல கோடி தேறும்.  இவளுக்கு மாத வருமாணம் ரூ.50,000 க்கு மேல்.  மும்பை பிச்சைக்காரன் மாஸ்ஸூ. இவனுக்கு சராசரி தின வருமானம் ரூ.1,500 மும்மும்பையில் இரண்டு அப்பார்ட்மெண்ட் வைத்துள்ளான். மதிப்பு பல கோடி. இன்னொரு  மும்பை பிச்சைக்காரன் சம்பாஜி காலே. சோலாப்பூரில் இரண்டு வீடு, விரார் பகுதியில் அப்பார்ட்மெண்ட் வைத்து இருக்கிறான். பப்பு குமார் என்ற பிச்சைக்காரன் பாட்னா ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்கிறான். இவன் சொத்து மதிப்பு ஒன்றரை கோடி. லேவாதேவிக்கு பணம் கொடுக்கிறான்.

இந்தியாவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கோடிஸ்வர பிச்சைக்காரர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லட்சாதிபதி பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். பிச்சை எடுப்பது பணம் கொழிக்கும் தொழிலாகி விட்டது. நீ தெருவில் பிச்சைதான் எடுப்பாய் என திட்டினால் அது திட்டே அல்ல. கோடிஸ்வரனாய் வாழ்வாய் என வாழ்த்துவதே

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.