அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மனைவியா ? காதலியா ? யாரை காப்பாற்றுவிங்க…

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

முதலைகள் நிறைந்த குளத்தில் அம்மா, மனைவி, காதலி, குழந்தை, பணம் வைத்துக்கொண்டு ஒருவர் தத்தளித்துக்கொண்டு
இருக்கிறார்கள். இதில் யாரை காப்பாற்றுவீர்கள் என்பதே கேள்வி.
(புகைப்படத்தை வைத்து கதை எழுதச்சொன்னால் சினிமா திரைக்கதை ஆசிரியர்களாக இருந்தால், காதலியுடன் ஒரு ரொமான்ஸ்
சாங்க் அந்த குளத்திலேயே ஆடிப்பாடிவிட்டு, இறுதியில் ஹீரோ முதலைகளுடன் சண்டைப்போட்டு அனைத்தையும் ஜலசமாதியாக்கிவிட்டு குடும்பத்தை காப்பாற்றுவதோடு அந்த பணத்தையும் லாவகமாக எடுத்து ஜாலியாக வாழ்வதுபோல் முடிப்பார்கள்.) கேள்வியை போலவே இந்த புகைப்படமும் முரண்பாடுகள் நிறைந்ததாகவே இருக்கிறது.
மனைவி இருக்கும் இடத்தில் காதலி எப்படிய்யா வரும்? ஆபத்தில் உயிரைவிட பணத்துக்கா முக்கியத்துவம் தருவார்கள்? மனிதர்கள் தங்களுக்கு ஆபத்து என்கிறபோது உளவியல் ரீதியாக முதலில் தங்களை காப்பாற்றிக் கொள்ளவே வழி தேடுவார்கள்,
யாராவது காப்பாற்ற வந்தால் தன்னை முதலில் காப்பாற்ற வேண்டும் என நினைப்பார்கள், அது இயல்பானது. இந்த புகைப்படத்தில்
இருப்பவர்கள் எல்லாம் யார்?
அம்மா, மனைவி, குழந்தை, காதலி, பணம்.
குளத்துக்கு வெளியே நிற்கும் ஆணின் அம்மா ஆபத்து நிறைந்த குளத்தில் தன் மகன் இறங்கி தன்னை காப்பாற்ற வரவேண்டும் என விரும்பமாட்டார். தான் வாழ்க்கையில் இறுதிக்கட்டத்தில் உள்ளோம், இனி நமக்கென்ன வாழ்க்கை என நினைப்பார். அம்மா மீது பாசத்தில் தன்னை காப்பாற்றவந்தாலும் மருமகளை முன்னிறுத்தி அவளைத்தான் காப்பாற்றச்சொல்வார். அடுத்ததாக மனைவியை முதலில் காப்பாற்ற முயன்றால், ஆபத்திலுள்ள தங்களது குழந்தையை முதலில் காப்பாற்றவே அந்த தாய் சொல்வார். அந்த குழந்தையின் பாட்டியும் அதையே சொல்வார். குழந்தைக்கு பதில் தங்களை முதலில் காப்பாற்ற வேண்டும் என தாயோ, பாட்டியோ நினைக்கமாட்டார்கள். அந்த புகைப்படத்தில் காதலி இருக்கிறார். எனக்கென்னவோ நடிகர் விஜய்யின் ரசிகர் யாராவது இந்த புகைப்படத்தை உருவாக்கியிருப்பார் என நினைக்கிறேன். காரணம் நடிகர் விஜய் தான், தன் மனைவி, பிள்ளைகள், அப்பா அம்மாவை தவிக்கவிட்டுவிட்டு காதலியுடன் குஜாலாக இருக்கார். சாராசரி மனிதன் யாரும் ஆபத்திலுள்ள அம்மா, மனைவி, பிள்ளைகளை விட்டுவிட்டு காதலியை காப்பாற்ற ஓடமாட்டார். காதலியை முதலில் காப்பாற்ற முயன்றால் மனைவியானவர் கண வைன மு தைலக்கு சாப்பாடாக்கிவிடுவார்.
ஆபத்தில் உள்ள அம்மா, மனைவி, குழந்தை, காதலியின் உயிரா? பணமா? எது முக்கியம் எனக்கேட்டாள் பணத்தை தேர்வு செய்யும் அளவுக்கு மனிதர்கள் அனைவரும் இன்னும் மோசமான இடத்துக்கு போகவில்லை. அனைவரும் சேர்ந்து முதலில் குழந்தையை காப்பாற்றவே முயற்சி செய்வர், அதன்பின் மனைவி, அம்மா, காதலி என முயற்சிப்பார்கள். அதுதான் மனித மனம்.

2026 June 11 - 17 Angusam Book

– ராஜா ராஜ்பிரியன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.