‘பத்தா’வை தேடுபவர்கள் யார்? விடை அக்.01-ல்

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்கும், ஸ்டார் ஸ்டுடியோ18 (Star Studio18) , ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios) மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் (Cine 1 Studios Production) நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஒரு சிறுவன் ஓடுவதுடன் தொடங்கும் டீசர், அடுத்தடுத்து பல சுவாரஸ்யமான காட்சிகளுடன் பயணிக்கிறது. ஊரே ‘பத்தா’வைத் தேடும் சூழல் உருவாக, அந்தத் தேடலின் பின்னணி என்ன என்ற கேள்வியை எழுப்பும் வகையில் டீசர் அமைந்துள்ளது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இப்படத்திற்கு இசை : சாய் அபயங்கர் வழக்கமான டீசர் பாணியில் கதையின் மையத்தை வெளிப்படுத்தாமல், கதாபாத்திரங்கள், காட்சிகள் மற்றும் மர்மத்தை மட்டுமே முன்னிறுத்தியுள்ளது ‘பத்தா’ டீசர். விஜய் சேதுபதியின் தோற்றங்கள், 80s-களின் களப்பின்னணி, இசை மற்றும் காட்சியமைப்பு ஆகியவை இணைந்து, படம் முற்றிலும் புதுவிதமான அனுபவமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.

வரும் அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது ‘பத்தா’.

—  ஆண்டவர்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.