தில்லைநகர் 1-வது கிராஸ் முதல் 11-வது கிராஸ் வரை உள்ள அறிவிப்புப் பலகைகளில் தவறான கிராஸ் எண்
திருச்சிராப்பள்ளி தில்லைநகர் 1-வது கிராஸ் முதல் 11-வது கிராஸ் வரை ஒவ்வொரு கிராஸின் பெயரையும் அடையாளப்படுத்தும் வகையில் கல் அல்லது சிமெண்ட் பலகைகளால் அமைக்கப்பட்ட நிரந்தர அறிவிப்புப் பலகைகள்உள்ளன.
தற்போது, அந்த அறிவிப்புப் பலகைகள் முழுவதும் தனியார் மற்றும் தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களை எழுதி, அதில் கீழே கிராஸ் களின் பெயர்களை தவறாக எழுதி இருக்கிறார்கள். தில்லைநகர் பகுதியில் ஏராளமான மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை மையங்கள் இருப்பதால், கிராமப்புறங்களிலிருந்தும் வெளிமாவட்டங்களிலிருந்தும் தினமும் பலர் சிகிச்சைக்காக வருகை தருகின்றனர்.
அவர்கள் கிராஸ் பெயர்களைப் பார்த்து இடத்தை அடையாளம் காண வேண்டிய சூழலில், இந்த விளம்பரங்கள் காரணமாக குழப்பமடைந்து தவறான இடங்களுக்குச் செல்லும் நிலை உருவாகிறது. இதனால் பொதுமக்களுக்கு தேவையற்ற சிரமும் கால விரயமும் ஏற்படுகிறது.
எனவே, தில்லைநகர் 1-வது கிராஸ் முதல் 11-வது கிராஸ் வரை உள்ள அனைத்து அறிவிப்புப் பலகைகளிலும் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை உடனடியாக அகற்றி, எதிர்காலத்தில் இதுபோன்ற விளம்பரங்கள் ஒட்டப்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.