குழந்தைகளின் எமன் பக்கவாதம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கொஞ்சி விளையாடும் குழந்தைகளைப் பாதிக்கும் பக்கவாத நோயைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.

தெய்வக்கரங்கள் தவழத் தடுமாறிட
பாதம் தரை தொட மறுத்திடுதே
தன் குழலிசையால் வசியம் செய்யும் இதழ்களும்
யாக மௌனம் சாதிப்பது ஏனோ?
களைப்பறியா பருவத்தில் இளைப்பாறுவது ஏனோ?
கனவோடு அக்குழந்தைகளை சுமக்கும் பெற்றோர்
தவமற்ற வரமாம் இம்மண்ணுலகிற்கு…

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

இக்கவிதையின் ஆழம் தீவிர சிகிச்சைப் பிரிவில் குழந்தையை சேர்த்துவிட்டு, வெளியில் குழந்தைக்கு என்ன ஆயிற்றோ!… என்று கண்கலங்கி பதற்றத்தோடு நிற்கும் பெற்றோருக்கு நன்கு புரியும். அவ்வாறான நிகழ்வு வேறு யாருக்கும் வரக்கூடாது என்ற எண்ணத்துடன் இப்பதிவை நான் சமர்பிக்கிறேன்.

கருவில் இருக்கும் குழந்தையைக் கூட பக்கவாத நோய் தாக்கும். ஒரு லட்சம் குழந்தைகளை எடுத்துக் கொண்டால் 2 முதல் 4 குழந்தைகளுக்கு பக்கவாத நோய் இருப்பதாக மருத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக, நடுத்தர வர்க்கம் மற்றும் கீழ்த்தட்டு மக்களையே இந்நோய் அதிகம் தாக்குகிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

குழந்தைகளுக்கு பக்கவாத நோயின் அறிகுறிகள் பெரியவர்களுக்கு வருவது போன்று தான் இருக்கும். பக்கவாத நோய்க்கான காரணிகள் மட்டும் வேறுபடுகிறது. முக்கியமான காரணிகள் என்னவென்றால், இரத்தக் குழாய்களில் ஏற்படும் பிறவிக் கோளாறுகள் (Arteriopathy) இதயத்தில் ஏற்படும் பிறவிக் கோளாறுகள் (Congenital Heart Disease), மரபணு கோளாறுகள், இரத்தம் உறைதலில் ஏற்படும் கோளாறுகள், மூட்டு மற்றும் இணைப்புத்திசு வியாதிகள், மூளைக்காய்ச்சல், புற்றுநோய்கள் ஆகியவை அடங்கும்.

குழந்தைகளுக்கு பக்கவாத நோய் வந்துவிட்டால், பக்கவாத நோய் ஏன் வந்தது?…நோய்க்கான காரணம் என்ன? என்பதை முதலில் கண்டறிய வேண்டும். அப்போது தான் அக்குழந்தைக்கு மறுபடியும் பக்கவாதம் வராமல் தடுக்க முடியும். பக்கவாத நோய்க்கான வைத்தியமுறை அதற்கான காரணிகளைப் பொரறுத்தே அமையும். இரத்தம் உறைதலில் உள்ள கோளாறினாலோ அல்லது இதயத்தின் கோளாறுகளாலோ ஏற்பட்ட பக்கவாத நோய்க்கு வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில், இதயத்தில் ஏற்படும் பிறவிக் கோளாறுகளை நாம் கண்டுபிடித்து அதற்குரிய வைத்திய முறைகளை செய்தோமேயானால் அதனால் வரும் பக்கவாத நோயை தடுத்திடலாம்.

எனவே, நம் குழந்தைகள் நன்றாக விளையாடுகிறார்களா, சிறிது நேரத்தில் சோர்வடைந்து விடுகிறார்களா என கவனிக்க வேண்டும். குழந்தைகளால் தனக்கு இந்த பிரச்சனை தான் உள்ளது என்பதை உணரமுடியாது. எனவே, படியேறுவதில் சிரமப்பட்டாலோ அல்லது சிறிது நேரம் நடந்து மூச்சு வாங்கினாலோ, மூட்டு வலிக்கிறது என அடிக்கடி கூறினாலோ மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

வாரத்தில் 6 நாட்கள் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றுவிடுகின்றனர். தினமும் மாலையில் பயிற்சி வகுப்புகளுக்குச் (டியூசன்) செல்கின்றனர். மீதி நேரம் தொலைக்காட்சி மற்றும் அலைப்பேசியில் மூழ்கிவிடுகிறார்கள். பெற்றோர்களாகிய நாம் ஞாயிற்றுக்கிழமை அன்று நம் குழந்தைகளின் உடல்ரீதியான திறமைகளை பரிசோதித்து பார்க்க வேண்டும்.

அவர்களுக்காக நேரம் ஒதுக்கி அவர்களது பிரச்சனைகள் என்ன என்பது பற்றி பேச வேண்டும். இப்படி செய்வதனால் நம் குழந்தைகளின் ஆரோக்கிய குறைபாட்டை எளிதாக கண்டறிந்து குணப்படுத்தி விடலாம்.
காய்ச்சலுடன் வாந்தி, தலைவலி மற்றும் வலிப்பு வந்தால் உடனே மூளை நரம்பியல் நிபுணரின் ஆலோசனையை பெற வேண்டும். காய்ச்சலோடு மூட்டு வீங்கி வலித்தால் சரவாங்கி காய்ச்சலின் (Rhematic Fever) அறிகுறியாக இருக்கலாம்.

இக்காய்ச்சல் இதயத்தையும், இதயவால்வுகளையும் பாதிக்கக் கூடியது. இக்காய்ச்சலை மருந்தைக் கொடுத்து குணப்படுத்தி விட்டால் இதயத்தில் பாதிப்பு ஏற்படாமல் தடுத்து விடலாம். அதுமட்டுமல்லாமல், பக்கவாத நோயிலிருந்தும் நம் குழந்தையை காத்திடலாம். குழந்தைகளின் உணவு முறையை பெற்றோர்கள் கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். இரத்தக் குழாய்களில் வரும் அடைப்புகள் பிறந்த முதல் நாளில் இருந்தே தொடங்குகிறது. வெகு விரைவில் அடைபடுவதும் அடைபடாமல் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பதும் நமது உணவு முறைகளிலே உள்ளது.

பெற்றோர்களின் கவனத்திற்கு…
குழந்தைகள் தானே என்றும், வாங்கி கொடுக்காவிட்டால் அவர்கள் அழுவார்கள் என்றும் உடலுக்கு ஒவ்வாத அனைத்து உணவுப் பொருட்களையும் வாங்கி கொடுக்காதீர்கள். பதப்படுத்தப்பட்ட பொருட்கள், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் மைதாவினால் ஆன பொருட்கள் அனைத்தும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியவையே!…சமீபகாலமாக பாலிதீன் பைகளில் டீ மற்றும் சூடானபொருட்களை வாங்கி வந்து உண்ணும் பழக்கம் அதிகரித்துள்ளது.

குழந்தைகள் எப்போதும் அலைப்பேசியுடன் தான் இருக்கிறார்கள். எனக்கு தெரியாத விஷயங்கள் கூட என் மகனுக்கு தெரியும் என்று பெருமையாக கூறும் பெற்றோர்களே, நீங்கள் தான் உங்கள் குழந்தைக்கு எமன் என்பதை உணருங்கள். இந்த இரு பழக்கங்களினால் குழந்தைகளுக்கு வரும் புற்றுநோய்களும் அதிகரித்து, அதனால் வரும் பக்கவாத நோயும் அதிகரித்த வண்ணமே உள்ளன. எனவே குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு அஸ்திவாரம் இடவேண்டிய பொறுப்பு பெற்றோர்களான உங்கள் கையில் தான் உள்ளது என்பதை அனுதினமும் நினைவில் கொள்ளுங்கள். 

அதிகப்படியான கொழுப்பினால் வரும் பக்கவாத நோய் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

(விழிப்போம்)…

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.