புதிய தயாரிப்பாளருக்கு உதவிய சீனியர் தயாரிப்பாளர்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

சிறுவயதிலேயே தனது தாயை இழந்ததால், விரக்தியாகி, போதைக்கு அடிமையாகி இருளில் விழும் இளைஞனை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறாள்  இளம் பெண் ஒருத்தி. அவள் வந்த பின் அவனது வாழ்க்கை எப்படி மாறியது? என்பதைச் சொல்லும் படம் தான் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்?’  அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்டனி என்பவர் தயாரித்து ஹீரோவாக நடிப்பதுடன்  கதை-திரைக்கதை-வசனம்-எடிட்டிங் பணிகளையும் செய்துள்ளார். பெங்காலி நடிகையான மதுமிதா தாஸ், ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஜீவா ரவி உட்பட பலர் நடித்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் 04-ஆம் தேதி ரிலீசாவதால், படத்தின் பாடல்கள் & டிரெய்லர் வெளியீட்டு விழா, ஆகஸ்ட் 27-ஆம் தேதி சென்னையில் நடந்தது.

‘ஏன் என்னை ஏதோ செய்தாய்?’ இதில் ஹீரோயின் மதுமிதா தாஸ், நடிகர் ஜீவா ரவி, மியூசிக் டைரக்டர்கள் ஜெய்ஹார் ஹரிநாத்,  அசோக் ஸ்ரீதரன், நடிகை நவ்யா சுஜி, பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, ஆர்ட் டைரக்டர் சுரேந்திரன் ஆகியோர் சுருக்கமாகப் பேசினார்கள்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தயாரிப்பாளர்-ஹீரோ—டைரக்டர் ஆண்டனி, “இந்த டைட்டிலை செலக்ட் பண்ணியது கார்த்திக் நேத்தா சார் தான். அத்துடன் அருமையான பாடல்களையும் எழுதியுள்ளார். எனது இணை இயக்குனர் ஜேனட் தான் ஆரம்பம் முதல் இப்போது வரை துணை நிற்கிறார். இந்தப் படத்தை ரிலீஸ் பண்ண முடியுமா? என்ற கவலையில் இருந்தப்ப பேருதவி செய்தவர் தனஞ்செயன் சார் தான். புதியவனான என்னையும் எனது படத்தையும் சப்போர்ட் பண்ணுமாறு மீடியா நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்”.

‘ஏன் என்னை ஏதோ செய்தாய்?’ தனஞ்செயன், ”மிகவும் குறுகிய நாட்களில் தயாரானாலும் அழகான, கவித்துவமான காதல் கதையைக் கொடுத்துள்ளார் ஆண்டனி. முன்கூட்டியே திட்டமிட்டதால் தான்  இந்த தரமான சினிமா தயாராகியுள்ளது. ஆண்டனி போன்ற நல்ல கிரியேட்டர்களுக்கு மீடியாக்கள் துணை நிற்க வேண்டும்”.

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.