யோகா – மனநலத்திற்கான அருமருந்து !
ஜூன்- 21 அன்று திருச்சி தேசியக் கல்லூரியின் உள் விளையாட்டு அரங்கில் சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது. ”யோகா என்பது உடல் நலத்திற்கானது மட்டுமல்ல; அது மன நலத்திற்கும் சேர்த்தே துணை செய்யக்கூடிய அருமருந்து” என்பதைத் தமது தலைமையுரையில் எடுத்துரைத்தார் கல்லூரி முதல்வர் முனைவர் து. பிரசன்ன பாலாஜி.

கலை மாமணி மற்றும் ஆச்சாரியா விருது பெற்ற தமிழகத்தின் தலைசிறந்த யோகக் கலைப் பயிற்றுனர் யோகா ராமசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு யோகக் கலையை பயிற்றுவித்தார்.
யோகக் கலையின் பல்வேறு முத்திரைகளையும் வழிமுறைகளையும் எடுத்து உணர்த்தியதோடு ஒவ்வொரு யோகக் கலைக்கும் உரிய சிறப்பம்சங்களை மாணவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் தெளிவாக பயிற்சியோடு எடுத்துரைத்தார். நிறைவாக உடற்கல்வியியல் துறைப் பேராசிரியர் முனைவர் பூபதி நன்றியுரை நல்கினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.