அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நுகர்பொருள் வாணிபக் கழகம் பெயரில் போலி பணி நியமன ஆணை: இளைஞர் கைது!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

நுகர்பொருள் வாணிபக் கழகம் பெயரில்
போலி பணி நியமன ஆணை:
இளைஞர் கைது!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி போலி பணி நியமன ஆணை தயாரித்து வழங்கி ஏமாற்றிய தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இதில் வேடிக்கை என்னவெனில், ஏமாற்றப்பட்ட இளைஞரிடம் புகார் மனு பெற்று வழக்கு பதிவு செய்யாமல், இக்குற்றச் செயலில் தொடர்புடைய நபரிடமே புகார் மனு பெற்றுக் கொண்டு இதில் தொடர்புடைய மற்றொரு நபரை கைது செய்துள்ளனர் தஞ்சாவூர் நகர தெற்கு காவல் நிலைய போலீஸார்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை செல்வம் நகரைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர் (47). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

இவருக்கு பிஎஸ்என்எல் குடியிருப்பைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மூன்று மாதங்களுக்கு முன்பு பாலாஜி நகர் பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் அறிமுகமாகியுள்ளார்.

இருவரும் அடிக்கடி அதே டீ கடையில் சந்தித்து வந்துள்ளனர். இதனால் அவ்விருவருக்கு இடையே நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது.

தனது மாமா TNCSC அலுவலகத்தில் பணிபுரிகிறார். உங்களுக்கு வேண்டியவர்களுக்கு TNCSC-யில் வேலை வேண்டுமெனில் நான் வாங்கித் தருகிறேன் என ராஜ்குமார், பிரான்சிஸ் சேவியரிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில், பிரான்சிஸ் சேவியரின் தூரத்து உறவினரான ஒய்.எஸ்.பாலு என்பவர் அவரைத் தொடர்பு கொண்டு தனக்கு தெரிந்த ஆலக்குடியைச் சேர்ந்த அன்பழகன் (28) என்பவருக்கு TNCSC யில் வேலை வேண்டும் எனக் கூறியுள்ளார்.


தனக்கு தெரிந்தவரான ராஜ்குமார் மூலம் பெற்றுத் தருவதாக பிரான்சிஸ் சேகர் கூறியுள்ளார்.
அதன் பின்னர், பாலு சொன்னதாகக் கூறி அவரின் தூரத்து உறவினரான ராமமூர்த்தி என்பவர் பிரான்சிஸ் சேவியரை தொடர்பு கொண்டு அவரது பண்ணையில் பணிபுரியும் இளைஞர் அன்பழகனுக்கு தான் வேலை வேண்டும் எனக் கூறியுள்ளார். அவருக்கு ராஜ்குமாரின் மொபைல் நம்பரை கொடுத்துள்ளார் பிரான்சிஸ் சேவியர்.

இதைத் தொடர்ந்து, மே 6 ஆம் தேதி காலை வழக்கம்போல பாலாஜி நகர் பகுதியில் அமைந்துள்ள டீ கடையில் பிரான்சிஸ் சேவியரை சந்தித்த ராஜ்குமார்,  TNCSCயில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணையைக் கொடுத்துள்ளார்.

இதுபற்றி அன்பழகனை தொடர்பு கொண்டு தெரிவித்து அவரை அன்றைய தினம் மாலை பாலாஜி நகரில் உள்ள டீ கடைக்கு வரவழைத்து பணி நியமன ஆணையை அவ்விருவரும் கொடுத்துள்ளனர்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அப்போது ஏற்கெனவே பேசி ஒப்புக் கொண்டபடி, ரூ.50,000ஐ பிரான்சிஸ் சேவியர் முன்னிலையில் ராஜ்குமாரிடம் கொடுத்துள்ளார் அன்பழகன்.

அப் பணி நியமன ஆணையில் மே 6 என தேதியிட்டு அதிகாரியின் கையெழுத்து போடப்பட்டிருந்தது. அதனால், என்றைக்கு பணியில் சேர வேண்டும் என அன்பழகன் கேட்டதற்கு, மே 19ஆம் தேதி சேர வேணடும் என ராஜ்குமார் கூறியுள்ளார்.

மே 19ஆம் தேதியன்று அவரை அன்பழகன் தொடர்பு கொண்டு கேட்டதற்கு ‘இன்னைக்கு வேண்டாம். மே 22ஆம் தேதி சேருங்க’ எனக் கூறியுள்ளார் ராஜ்குமார்.

மே 22ஆம் தேதி தஞ்சாவூரில் உள்ள TNCSC மண்டல அலுவலகத்துக்கு பிரான்சிஸ் சேவியருடன் அன்பழகன் சென்று தன்னிடமிருந்த பணி நியமன ஆணையை அங்கிருந்த அதிகாரியிடம் கொடுத்துள்ளார்.

அதை வாங்கிப் பார்த்த அதிகாரி அதிர்ச்சியடைந்து, ‘இந்த பணி நியமன ஆணை போலியானது’ எனக் கூறியுள்ளார். அதன் பின்னர் அவர்கள் இருவரும் அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டனர்.


இந்நிலையில், இது குறித்து மே 26ஆம் தேதியன்று பிரான்சிஸ் சேவியர் கொடுத்த புகாரின் பேரில், தஞ்சை தெற்கு காவல் நிலைய போலீஸார் ஜுன் 1ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து குற்றஞ்சாட்டப்பட்ட ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில் வேடிக்கை என்னவெனில், இச் சம்பவத்தில் ஏமாற்றப்பட்டவர் அன்பழகன். அவரது புகாரின்பேரில் தான் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் இக்குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்த பிரான்சிஸ் சேவியரின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து மற்றொரு குற்றவாளியான ராஜ்குமாரை கைது செய்துள்ளனர் போலீஸார்.

பிரான்சிஸ் சேவியரின் தந்தை பெயரை எப்ஐஆரில் ஒரு இடத்தில் ‘பாக்கியராஜ்’ என்றும், மற்றொரு இடத்தில் ‘பாக்கியநாதன்’ என்றும் குறிப்பிட்டுள்ளனர் போலீஸார்.

நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர், உதவியாளர், வாட்சமேன் ஆகிய பணியிடங்களுக்கான இன்டர்வியூ அண்மையில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் உதவியாளர் பணியிடத்திற்கு அன்பழகன் விண்ணப்பித்துள்ளார். ஆனால் நேர்காணலில் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

இந்நிலையில், அவருக்கு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் அனுப்பப்பட்டிருந்த நேர்காணலுக்கான அழைப்பு கடிதத்தில் கையெழுத்திட்டிருந்த அதிகாரியைப் போல, போலி பணி நியமன ஆணையில் பச்சை மையில் கையெழுத்திட்டு அலுவலக முத்திரை இடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.