முதல்வர் வருகையின் போது அதிரடி! அய்யாக்கண்ணு உட்பட 50 விவசாயிகள் கைது!
காவிரியில் தண்ணீர் பெற்றுத்தர வலியுறுத்தி இந்திய ஜனாதிபதியிடம் மனு அளிக்க சென்ற அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் கைது – முதல்வர் வருகையின்போது விவசாயிகளை கைது செய்த காவல்துறை செயலுக்கு கண்டனம்.
காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரை வழங்காத கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்திட வலியுறுத்தியும், தண்ணீரைப் பெற்றுத் தர வலியுறுத்தியும் இந்திய ஜனாதிபதி திருமதி.திரௌபதி முர்மு அவர்களிடம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 150 விவசாயிகள் டெல்லி சென்று மனு அளிக்க திட்டமிட்டு இருந்தனர்
இன்றைய தினம் காலை ரயில் மூலம் சென்னை புறப்பட்டு பின்னர் அங்கிருந்து டெல்லி செல்வதற்காக ரயில் டிக்கெட் அனைத்தும் முன்பதிவு செய்து இருந்த நிலையில், இன்று அதிகாலையிலேயே அய்யாக்கண்ணு உள்ளிட்ட 50 விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்து பின்னர் உறையூரில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளதுடன், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜனநாயக முறையில் விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை அளிக்கச்சென்ற தங்களை கைதுசெய்து அடைத்து வைத்திருப்பது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளபடி தமிழகத்திற்கு மாதம்தோறும் வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு முறையாக வழங்குவதில்லை என்றும், குருவை சாகுபடி அழிந்துவிட்டது தற்போது சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகியுள்ளது.
உரிமையை கேட்பதற்கு அனுமதியில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதைதவிர வேறு வழியில்லை, போய் சார் கைது செய்த நிலையில் சிறைக்கு செல்லவும் தயார் என்றனர். இன்றைய தினம் தமிழக முதல்வர் விஜய் அவர்கள் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறப்பதற்காக வருகை புரிந்த நிலையில், விவசாயிகளை கைது செய்யக்கூடாது என நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று இருந்த நிலையிலும் விவசாயிகளை கைது செய்திருப்பது என்பது நியாயமற்றது என்றும் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.