அரசியல் லாட்டரி !
எலக்க்ஷன் பாண்ட்ஸ் ஸ்காம் நம் பலரின் கண்களைத் திறந்திருக்க வேண்டும்! ஆனால், நமக்குதான் கடிவாளக் கண்ணாச்சே, ஒரே அரசியல் சார்பில் பார்ப்பவர்கள்.
எலக்க்ஷன் பாண்ட்ஸ் ஸ்காமில் லாட்டரி மார்ட்டின் குடும்பம், 1500+ கோடி என மிக அதிகம் கொடுத்தது பிஜேபிக்கு! அதே குடும்பம், திமுகவிற்கு 600 கோடி, அதிமுகவிற்கு, காங்கிரஸுக்கு என எல்லா கட்சிகளுக்கும் கொடுத்தனர், albeit வெவ்வேறு தொகை! இதற்கு முன்னரும் பல ஆண்டுகளாக எல்லா கட்சிகளுக்கும் கொடுத்துள்ளனர்!
இந்தத் தேர்தலில், லட்சிய ஜனதாவோ ஏதோ பெயரில் பாண்டிச்சேரியில் அந்த குடும்பத்து ஆளுக்கு NDA கூட்டணியில் இடம் கூடாது என்று சொன்னார் N.ரங்கசாமி. ஆனால், அவரை மண்டையில் போட்டு, சம்மதிக்க வைத்தனர் பிஜேபி! எவ்வளவு பணம் கை மாறியிருக்கும் என்பதை, மூளை இருக்றவங்க, யோசிச்சிக்கோங்க!
லீமா ரோஸ் என்ற அந்த குடும்பத்து பெண்மணிதான் இப்போது அதிமுகவின் திரைமறைவுத் தலைவர் என்பதாகத் தெரிய வந்திருக்கிறது! அதிமுக எனும் முழு கட்சியையே வாங்கறதுன்னா, எவ்வளவு விலை? யோசிக்கக் கூட முடியல! CBI, EDக்குத் தெரிந்திருக்கும்! அந்தம்மாவைப் பார்த்தாலே பழைய சசிகலாவைப் பார்க்றாப்ல, பயம்ம்ம்மா இருக்கு!
காங்கிரஸ் அவசரமா அணி மாறின விஷயத்துல பின்னாடி இருந்ததும், இதே லாட்டரி மார்ட்டின் குடும்பம்தான்! எவ்வளவு பணமோ?
இப்படி, மத்தியில் ஆளும் பிஜேபி கட்சி தொடங்கி, காங்கிரஸ், திமுக, அதிமுக, விசிக என திராவிட கட்சிகள் /ஆட்சிகள், மற்றும் பாண்டிச்சேரியிலும் வியாபித்திருப்பது. ஒரே குடும்பம்! லாட்டரி மார்ட்டின் குடும்பம்!
And….Yes…! அதே குடும்பத்தைச் சேர்ந்த ஆதவ் அர்ஜூனாதான் இப்ப விஜய்யின் தவெக கட்சியின் பின்புலம்! முக்கிய மேட்டர் இப்பதான் வருது. இப்ப ஆதவ் அர்ஜூனாதான் மினிஸ்டர்! எந்தத் துறைக்கு? ஆஆஆங்! அதேதான்..! Tasmac துறைக்கு!
நம்மால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவு பணத்தை, அரசியல் எனும் லாட்டரியில் invest செய்திருக்கிறார்கள் லாட்டரிக் குடும்பம்! இனி அவர்களுக்கு எக்கச்சக்க returns வரப்போகும் நேரம்! வலைப்பின்னல் புரிகிறதா?
இன்னும் புரியாம, “இவன் தீயசக்தி.. அவன் தூயசக்தி… இவன் கெட்டவன்.. அவன் நல்லவன்… இவன் வஞ்சகன்… அவன் மகான்…” என்று தொடர்ந்து உளறிக் கொண்டிருக்கப் போகிறீர்கள் என்றால், வீட்ல குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் இருக்கும், போய் சாப்டு, வ்ளாடிட்ருங்க குழந்தைகளா!
– சங்கர் ராஜரத்தினம்








Comments are closed, but trackbacks and pingbacks are open.