அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

“நா வேற லெவல்” ரிலீஸ் & பிரஸ் மீட்!

திருச்சியில் அடகு நகையை விற்க

மலேசிய தமிழ் ஹிப்-ஹாப் ராப்பர், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் கிட் சாந்தே (Kidd Santhe) வின் புதிய ஆல்பம் பாடலான “நா வேற லெவல்” ரிலீஸ் & பிரஸ் மீட் மே. 20- ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. . இப்பாடலை முன்னணி இசை நிறுவனமான சோனி மியூசிக் வெளியிட்டுள்ளது.

மலேசியாவில் உருவாகி வரும் புதிய தலைமுறை தமிழ் ஹிப்-ஹாப் இசையில் முக்கியமான குரலாக கொண்டாடப்படுபவர் கிட் சாந்தே (Kidd Santhe ). தமிழ், ஆங்கிலம், மலாய், பஞ்சாபி போன்ற பல மொழிகளை கலந்த ராப் ஸ்டைலே இவரின் தனிச்சிறப்பு.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

சிறு வயதிலிருந்தே beatboxing மற்றும் இசையில் ஆர்வம் கொண்ட கிட் சாந்தே தனது 16-வது வயதில் பாடல்கள் தயாரித்து SoundCloud மூலம் பிரபலமானார். பின்னர் மலேசிய ஹிப்-ஹாப் குழுக்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை வெளியிட்டார். தற்போது உலகளாவிய “Desi Hip-Hop” இயக்கத்தில் முக்கியமான இளம் கலைஞர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார்.

தற்போது இந்திய கலாச்சார பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள ஆல்பம் தான் “நா வேற லெவல்”..

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

நா வேற லெவல்ஆல்பம் ரிலீஸ் நிகழ்வில் பேசியவர்கள்..

இயக்குநர் பார்த்திபன் ரவி
“இந்த வாய்ப்பை வழங்கிய சோனி மியூசிக் நிறுவனத்திற்கு மிக்க நன்றி. இது என்னுடைய முதல் இண்டெர்நேஷனல் ஆல்பம்.. ஏற்கனவே சோனி நிறுவனத்து டன் இரண்டு மியூசிக் வீடியோக்கள் செய்திருந்தாலும், இந்த புராஜக்ட் எனக்கு மிகவும் ஸ்பெஷல் மற்றும் மனதுக்கு நெருக்கமான ஒன்று.
அற்புதமான ஐடியாவை உயிர்ப்பிக்க இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த கிட் சாந்தேவுக்குகு நன்றி. திலீபன் இல்லாமல் இந்த ஆல்பம் உருவாகியிருக்கவே முடியாது. இந்த ஆல்பம் பாடலில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றி”. “தமிழே…உயிரே…” என உணர்வுடன் ஆரம்பித்த
சோனி மியூசிக் ரேவதி மாரியப்பன்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

“இந்தப் பாடலை மலேசியாவில் எடுப்பதாக இருந்தது. ஆனால் இதை சென்னையில் எடுக்கலாம் என கிட் சாந்தே சொன்னதும் சோனி நிறுவனமும் பெரிய ஆதரவு தந்தது.

இந்த ஆல்பத்திற்கு தமிழ்நாட்டில் கிடைத்த அன்பும் ஆதரவும் எங்களை மிகவும் நெகிழச்செய்தது. மலேசியாவிலிருந்து வந்த ஒரு தமிழ்க் கலைஞரை இவ்வளவு அன்பாக வரவேற்ற அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.இந்த பாடல் உருவாக பல மாதங்களாக ஒரு பெரிய குழு கடினமாக உழைத்துள்ளது. தொழில்நுட்பத்தை மட்டும் நம்பாமல், நூற்றுக்கணக்கான கலைஞர்களின் உழைப்பையும் ஒன்றிணைத்து இந்தப் பாடலை உருவாக்கியுள்ளோம். கிட் சாந்தேவின் இந்த வெற்றி அவருடையது மட்டும் அல்ல; மலேசியாவில் இருக்கும் பல தமிழ் கலைஞர்களின் கனவுகளுக்கான தொடக்கம்.

நா வேற லெவல்தமிழ்நாடு எப்போதும் திறமையை அங்கீகரிக்கும் மண். அந்த நம்பிக்கையோடு இந்த பாடலை உங்கள் கைகளில் ஒப்படைக்கிறோம்” *கிட் சாந்தே*
“இந்த ஆல்பம் உருவாக காரணமான மிக முக்கியமான நபர் இயக்குநர் தான் . ஒரு ஸ்டோரி போர்டை உயிரோட்ட முள்ள காட்சியாக மாற்றியது இயக்குநர் ரவி தான். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அதேபோல் மூன்று நாட்களிலேயே எனக்கு நடனம் கற்றுக்கொடுத்த நடன இயக்குநர் ஆகாஷ் அவர்களுக்கும் நன்றி.
இந்த பாடல் மூலம் நான் என்னை ஒரு நடிகராகவோ அல்லது இசையமைப்பாளராகவோ காட்ட விரும்பவில்லை. தமிழ்நாட்டின் உண்மையான ஹீரோக்களை காட்டவே இந்த பாடலை உருவாக்கினேன். ஆட்டோ ஓட்டுநர்கள் தான் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் மறைக்கப்பட்ட ஹீரோக்கள். சென்னைக்கு முதன்முதலாக வந்தபோது, என் கார் பஞ்சர் ஆகி நின்றது. ஒரு ஆட்டோ ஓட்டுநர் டயர் மாற்ற உதவிய அந்த தருணமே இந்த பாடலின் முழு கருத்தாக மாறியது. “நா வேற லெவல்” என்பது நான் அல்ல, ஆட்டோ ஓட்டுநர்கள் தான்.

அவர்கள் இன்று எரிபொருள் விலை உயர்வு, பராமரிப்பு செலவு, பைக் டாக்ஸி போட்டி போன்ற பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். இந்த பாடல் மூலம் அவர்களுக்கான மரியாதையும் அன்பும் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்பதே என் நோக்கம்.

நான் ஒரு மலேசிய இளைஞன். இசையின் துணையுடன் உங்கள் முன் வந்திருக்கிறேன். தமிழ்நாடு எனக்கு கொடுத்த அன்புக்கும் வரவேற்புக்கும் மனமார்ந்த நன்றி. “நா வேற லெவல்” பாடலை யூடியூப்பில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்”.

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.