அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

செம்மொழித் தமிழ் ஒரு பார்வை நூல் வெளியீட்டு விழா

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

செம்மொழித் தமிழ் ஒரு பார்வை நூல் வெளியீட்டு விழா திருச்சிராப்பள்ளி தமிழ் சங்க அரங்கில் நடைபெற்றது. பேராசிரியர் ப.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்க அமைச்சர் பெ.உதயகுமார் செம்மொழித் தமிழ் ஒரு பார்வை நூலை வெளியிட, முனைவர் ப.சுப்பிரமணியன், கௌரா புத்தக நிலைய ஜெய் கணேஷ் ராஜசேகரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

Sowdambikaa Group Of Schools & Colleges In & Around ...

திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்க துணைத் தலைவர் புலவர் இரா.வரதராசன், மென்பொறியாளர் கமல நாராயணன், கார்த்திகைச் செல்வன், பாவாணர் தமிழ் இயக்கம் பொறுப்பாளர் முனைவர் கு.திருமாறன், அறிவாளர் பேரவை மதிப்புறு முதன்மை ஆலோசகர் முனைவர் செ.அசோகன், இராசவேலர் செண்பகத் தமிழரங்கு இயக்குனர் இராச.இளங்கோவன், திருச்சித் திருக்குறள் பேரவை தலைவர் பு.வெ .தேவராஜ் திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றத் தலைவர் வீ.கோவிந்தசாமி,மணற்பாறை திருக்குறள் பயிற்றகம் புலவர் நாவை சிவம், திருச்சி அருவியக்கப் பேரவை நிறுவனர் பாவாணர் குரள்மொழி, புரட்சிப் பாவேந்தர் பேரவை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.செயலாபதி, பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் திருச்சி கிளை செயலர் க.மாரிமுத்து,சிரா இலக்கியக் கழகம் தலைவர் கேத்தரின் ஆரோக்கியசாமி, உலகத் தமிழ்ப் பண்பாட்டு மன்றம் நிறுவனர் முனைவர் க.திலகவதி, திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் பொதுச்செயலாளர் வை.ஜவஹர் ஆறுமுகம், இனிய நந்தவனம் இதழ் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன், சிரா இலக்கியக் கழக நிறுவனர் பா.ஸ்ரீராம், .தமிழிசைச் சங்கம் செயலர் ப.ராமதாசு, திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க செயலர் யோகா ஆசிரியர் பெ. விஜயகுமார், தமிழ் இலக்கிய ஆர்வலர் எம்.ஆர்.எஸ்.கேசவன், பேராசிரியர் முனைவர் சு.பாஸ்கர், திருச்சிராப்பள்ளி செம்மொழி மன்றம் நிறுவனர் தலைவர் தாமரை உள்ளிட்டோர் விழாமேடையில் நூல்கள் பெற்றுக் கொண்டனர்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் பா.பத்மப்ரியா நூலாய்வுரை ஆற்றினார். திருச்சிராப்பள்ளி தமிழ் சங்க அமைச்சர் பெ. உதயகுமார், பாவாணர் தமிழ் இயக்கம் முனைவர் கு.திருமாறன், அறிவாளர் பேரவை முனைவர் செ. அசோகன், பத்மஸ்ரீ மாராச்சி சுப்புராமன், பத்மஸ்ரீ தாமோதரன், தமிழ்ச்செம்மல் கோவிந்தசாமி, தமிழ்ச்செம்மல் ராச.இளங்கோவன், முனைவர் சு.செயலாபதி, முனைவர் க.திலகவதி உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினார்கள். நூலாசிரியர் ச.சண்முகநாதன் ஏற்புரையாற்றினார். முன்னதாக முனைவர் சு. செயலாபதி வரவேற்க, நிறைவாக கமல நாராயணன் நன்றி கூறினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.