அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

‘மூன்றாம் கண்’ பிரஸ்மீட் ! கலகலப்பு – கடுகடுப்பு !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

‘டிரெண்டிங் எண்டெர்டெய்ன்மெண்ட்’ & ‘ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ்’ பேனரில் கே.சசிக்குமார் தயாரித்து வரும் 12-ஆம் தேதி ரிலீசாகும் படம் ‘மூன்றாம் கண்’. அறிமுக இயக்குனர் சகோ கணேசன் டைரக்ட் பண்ணியுள்ள இப்படத்தில் விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, த்ரிகுண், ஜான்விஜய், ஸ்வேதா டோரத்தி, ‘சுந்தரா டிராவல்ஸ்’ ராதா உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு : என்.எஸ்.உதயகுமார், இசை : ராஜ்பிரதாப் & அஜீஸ், எடிட்டிங் : ஆர்.ராமர், நடனம் : ஐ.ராதிகா, ஆர்ட் டைரக்டர் : மைக்கேல், பி.ஆர்.ஓ. : சதீஷ் [ எய்ம்].

ஜூன் 12-ஆம் தேதி ‘மூன்றாம் கண்’ ரிலீசாவதால் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, ஜூன்.05-ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

Moondraam kanஇதில் தயாரிப்பாளர் சசிக்குமார், நடிகர்கள் விதார்த், சந்தோஷ் பிரதாப், டான்ஸ் மாஸ்டர் ராதிகா, எடிட்டர் ராமர் ஆகியோர் மட்டுமே படத்தைப் பற்றியும் படம் எடுப்பதற்கு பட்ட சிரமங்களைப் பற்றியும் பேசினார்கள். மற்ற எல்லோருமே மைக் முன்பு வந்து நின்று கொண்டு,  மேடையில் இருந்த அனைவரின் பெயரைச் சொல்லி மாறி மாறி கமெண்ட் அடித்தனர். அதே போல் மைக்கில் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது மேடையில் இருந்த கலையரசன், தேஜு அஸ்வினி, விதார்த், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் தங்களுக்குள் கமெண்ட் அடித்து கலகலப்பாக இருந்தனர். விதார்த் பேசுவதற்கு முன்பு பேசிய டைரக்ட் சகோ கணேசன், சுமார் அரைமணி நேரம் பேசினார் என்றால் அதில் இருபது நிமிடம் மேடையில் இருந்தவர்களைப் பார்த்து கமெண்ட் அடித்துக் கொண்டே இருந்தார். இது மீடியாக்கள் மத்தியில் கடுப்பைக் கிளப்பியது. அதனால் ஒரு சிலரின் பேச்சை சுருக்கமாக வெளியிடுகிறோம்..

தயாரிப்பாளர் சசிக்குமார், “இந்தக் கதை மீது வைத்த நம்பிக்கையால் தான் இப்படத்தைத் தயாரித்தேன். அனைவரும் மிகச்சிறந்த ஒத்துழைப்பைக் கொடுத்தனர்”.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

Moondraam kanடான்ஸ் மாஸ்டர் ராதிகா, “சகோ கணேசன் உதவி இயக்குனராக இருந்த போதே எனக்குத் தெரியும். அவரின் கடின உழைப்பின் வெளிப்பாடு தான் இந்தப் படம்”.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

எடிட்டர் ராமர், “இந்தப் படத்தில் பல ஆச்சர்யங்களும் வித்தியாசமான அம்சங்களும் இருக்கு. படம் பார்க்கும் போது ரசிகர்கள் அதை உணர்வார்கள்.

சந்தோஷ் பிரதாப், “இது சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் மட்டுமல்ல. ஒவ்வொருக்குள்ளும் இருக்கும் இருண்ட பக்கத்தைப் பற்றியும் இப்படம் பேசுகிறது. படத்தின் க்ளைமாக்ஸ் ரசிகர்களை சிந்திக்க வைக்கும்”.

Moondraam kanடைரக்டர் சகோ கணேசன், “எனக்கு இது முதல் படம் என்றாலும் மூன்று ஹீரோக்களை வைத்து படம் தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் சசிக்குமாருக்கு நன்றி. படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள், டெக்னீஷியன்கள் அனைவருக்கும் நன்றி”.

விதார்த், “மூன்று வருடங்களுக்கு முன்பு சகோ கணேசனுக்கு கொடுத்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றியுள்ளேன். படத்தில் எனக்கு வசனம் ரொம்ப ரொம்ப குறைவு தான். ஆனாலும்  டப்பிங் பேசுவதற்கு முன்பே முழுச்சம்பளத்தையும் கொடுத்துட்டார் சசிக்குமார்.  அனைவரின் கூட்டு முயற்சியில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு மீடியாக்கள் பேராதரவு கொடுக்க வேண்டும்”.

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.