ஆன்லைன் மூலம் மிரட்டி பணம் பறித்த குற்றவாளிகள் கைது !
திருச்சிராப்பள்ளி மாவட்டம், சோமரசம்பேட்டை, அதவத்தூர், சக்தி நகர் பகுதியை சேர்ந்த தனலட்சுமி, (62), க.பெ. பாலசுப்ரமணியன், என்பவர் கடந்த 17.04.2026 அன்று தனது வீட்டிலிருந்த போது அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசிய நபர் Telephone Department-ல் இருந்து பேசுவதாக இந்தியில் கூறியுள்ளார். உடனே, மேற்படி தனலட்சுமி தனக்கு இந்தி தெரியாது என்று கூறிய பிறகு வாட்சப் எண்ணிலிருந்து மீண்டும் தீபாலி என்ற பெயர் கொண்ட நபர் ஒருவர் பேசியுள்ளார்.
அப்போது, குற்ற வழக்கில் தொடர்புடைய நபரை சோதனை செய்த போது, தனலட்சுமி என்ற பெயரில் உள்ள உமது ஆதார் கார்டை பயன்படுத்தி பெங்களுரில் சிம் கார்டு வாங்கி, அதனை பயன்படுத்தி பல குற்ற சம்பவங்கள் நிகழ்த்தியிருப்பதாக கூறியுள்ளார். உடனே, தனலெட்சுமி. தனக்கும் இச்சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், பெங்களுர் இந்திராநகர் காவல் நிலையத்திலிருந்து பேசுவதாக தயா நாயக் என்பவர் பேசி, தான் இவ்வழக்கின் புலன்விசாரணை அதிகாரி என்றும், மேற்படி வழக்கில் உங்களை கைது செய்யாமல் இருப்பதற்காக நான் கூறும் வங்கி கணக்கில் உடனடியாக ரூ.15,00,000 /- அனுப்ப வேண்டும் என்று மிரட்டியுள்ளார். பின்பு 07.05.2026 வரை பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டு, நான்கு தவனையாக மொத்தம் ரூ.74,75,303 /- பணத்தை ஏமாற்றி பெற்றுள்ளனர். அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட தனலட்சுமி என்பவர் கொடுத்த புகாருக்கு 08.05.2026 அன்று . 76/26, U/s 127(2), 204, 308(2), 318(4), 336(3), 340(2) BNS r/w 66(D), 84(B) of IT Act 6T UL , மேற்கொண்டதில், மேற்படி பணம் அனுப்பிய வங்கி கணக்கின் முகவரியானது கோயம்புத்தூர் மாவட்டம் குறிச்சி பகுதியில் உள்ளதாக தெரிய வந்ததையடுத்து, திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையில், தனிப்படையினர் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், வங்கி கணக்கு துவங்குவதற்கு உடந்தையாக இருந்த 1.சரவணக்குமார், 32, த.பெ. ராமராஜ், 3/37 காமராஜர் தெரு, குருச்சி, சுந்தராபுரம், கோயம்புத்தூர், 2.ஆலன் மார்ட்டின், (49), த.பெ. அல்போன்ஸ் ராஜ், 13/32 சீனிவாசா நகர். 1வது குறுக்குத் தெரு. கொளத்தூர். திருவள்ளூர் ஆகியோர்களை 17.06.2026 அன்று கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர்.
அதன்பிறகு, மேற்படி கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய 3.அருண் பிரசாத் 37, த.பெ. ஜெகன் மோகன், 2/17 பெரியதம்பி காட்டு வளவு, குஞ்சாண்டியூர், கோனூர், சேலம் மாவட்டம், 4.மன்சூர் கான், 31, த.பெ. உஷேன் கான், 3A பெத்தி செட்டிபுரம், 2வது தெரு, ஆனைமேடு, திருப்பூர் மாவட்டம். 5. ஜோ @ சாம் பால் 29, S/o தனபாலன், 71 படேல் தெரு, ரத்தினபுரி, கோயம்புத்தூர் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு, இன்று (23.06.2026) நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 3 செல்போன்கள் மற்றும் போலி வங்கி கணக்கு துவங்குவதற்காக பெறப்பட்ட அனைத்து ஆவணங்கள் கைப்பற்றப்ட்டுள்ளன. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்த சைபர்கிரைம் காவல் ஆய்வாளர், மற்றும் காவலர்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. டோங்கரே பிரவீன் உமேஷ், இ.கா.ப அவர்கள் பாராட்டியுள்ளார்.












Comments are closed, but trackbacks and pingbacks are open.