அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

“ரெண்டு பேருக்கு நடுவுலதான் போட்டியே… வெடிக்கும் உட்கட்சி விவகாரம்?

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

விருதுநகர்: தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த பிறகு, விருதுநகர் மாவட்ட அரசியலில் அமைச்சர்கள் ஜெகதீஸ்வரி மற்றும் கீர்த்தனாவை மையமாகக் கொண்டு அடுத்தடுத்து பல சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில், அரசு விழாவில் பேனர் பெயர் விவகாரம் தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான ஜெகதீஸ்வரி தலைமையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சிலம்பப் போட்டியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் அரசு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கலந்துகொள்ளவில்லை. இருப்பினும், அதிகாரிகள் தயாரித்திருந்த அதிகாரப்பூர்வ பேனரில் கலந்துகொள்ளாத அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் முதலிடத்தில் இடம்பெற்றிருந்ததாகவும், நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்ததுடன், விருதுநகர் மாவட்ட பொறுப்பு அமைச்சரான ஜெகதீஸ்வரியின் பெயர் இரண்டாவது இடத்தில் அச்சிடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதைக் கண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி, மேடையிலேயே மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “நிகழ்ச்சியில் பங்கேற்காத அமைச்சரின் பெயர் ஏன் முதலிடத்தில்? நிகழ்ச்சிக்குத் தலைமை வகிக்கும் பொறுப்பு அமைச்சரின் பெயர் ஏன் இரண்டாவது இடத்தில்?” என்று அவர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

மேலும், இதுபோன்ற பெயர் வரிசை தொடர்பான தவறுகள் ஏற்கனவே பலமுறை நடந்துள்ளதாகவும், அதிகாரிகளிடம் இதுகுறித்து முன்பே எடுத்துரைத்திருந்தும் மீண்டும் அதே நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலரையும் நேரில் அழைத்து விளக்கம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக பேசப்படும் அரசியல் நிகழ்வுகள்

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

அண்மையில் முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பங்கேற்றபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த சில பிளக்ஸ் பேனர்கள் சேதப்படுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டன.
அதேபோல், அமைச்சர் கீர்த்தனா தொடர்பான பொதுக்கூட்டம் மற்றும் பிற அரசியல் நிகழ்வுகளும் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தின.

மேலும், மாவட்டத்தில் நடைபெற்ற பட்டாசு விபத்து உள்ளிட்ட முக்கிய சம்பவங்கள் தொடர்பாக அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த பின்னணியில், அரசு விழாவில் நடைபெற்ற பேனர் பெயர் சர்ச்சை, விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர்களின் அரசியல் முக்கியத்துவம் மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

-மாரீஸ்வரன் 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.