அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

முதல்வர் பேசியதை அனைவரும் பாராட்டினார்கள் – துணை சபாநாயகர் ரவிசங்கர் பேட்டி

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாவட்ட தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பாலக்கரை பகுதியில் சிறப்பு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.கே. ராஜா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் ரவிசங்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பிறகு துணை சபாநாயகர் ரவிசங்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டபேரவையில் விமர்சனம் வைத்துவிட்டு.. டிவி பார்க்க சென்றுவிட்டார். முதல்வர் பேசும் போது , முறையாக சபாநாயகரின் அனுமதி கேட்ட பிறகு தான் சைகை செய்தார். அப்பொழுது எதிர் புறத்தில் பேசுபவர்கள் ஒரு சிலர் ஒருமையில், கெட்ட வார்த்தையில் பேசினார்கள். அதை தான் சபாநாயகர் கண்டித்தார். சட்டபேரவையில் முதல்வர் பேசியதை அனைவரும் பாராட்டினார்கள்.
பேட்டியின் போது முன்னாள் மாவட்ட தலைவர் ஆர் கே ராஜா,மத்திய மாவட்ட தலைவர் செந்தில், நிர்வாகிகள் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர் , நந்தகுமார், சிந்தாமணி முத்துக்குமார், கெட்டப் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.