வந்துட்டாரு ‘ட்ரீம் ஸ்டார்’ திகில் கிளப்பிய தொகுப்பாளினி!
‘ஜினிமா மீடியா எண்டெர்டெய்ன்மெண்ட்’ தினேஷ் ராஜ் & ;கிரியேட்டிவ் எண்டெர்டெய்ன்மெண்ட்’ ஜி.தனஞ்செயன் தயாரித்து வரும் ஜூலை.10-ஆம் தேதி ரிலீசாகிறது ‘லவ் ஓ லவ்’, மகேஷ் ராஜேந்திரன் டைரக்ட் பண்ணியுள்ள இப்படத்தில் தனுஷின் சகோதரி விமலகீதாவின் மகன் பவிஷ் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக நாகதுர்கா, மற்ற கேரக்டர்களில் டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக்குமார், செல்வராகவன், வனிதா விஜயகுமார் உட்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : பி.ஜி.முத்தையா, இசை : ஃபாக்ஸ் என்., எடிட்டிங் : என்.பி.ஸ்ரீகாந்த், பி.ஆர்.ஓ.: ரேகா.
படத்தின் பாடல்கள் & டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை கமலா தியேட்டரில் ஜூன்.26-ஆம் தேதி காலை நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பவிஷின் தாத்தா டைரக்டர் கஸ்தூரி ராஜா, தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, கதிரேசன், டி.சிவா, ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, டைரக்டர் சசி என ஏராளமான சினிமா வி.ஐ.பி.க்கள் கலந்து கொண்டு ஹீரோ பவிஷையும் படக்குழுவையும் வாழ்த்திப் பேசினார்கள்.
தனுஷ் ரசிகர் மன்றத் தலைவரும் டைரக்டருமான சுப்பிரமணிய சிவா, மகாபாரத்திலிருந்து ஒரு கதையைச் சொல்லி அடுத்த விஜய்யும் இவர் தான் தனுஷும் இவர் தான் என பவிஷைத் தூக்கிப்பிடித்தார்.
ஜி.தனஞ்செயன், “அமேஸான் ஓடிடி கம்பெனிகிட்ட பேசும் போது ஜூலை.10-ஆம் தேதி படத்தை ரிலீஸ் பண்ணுங்க. இப்ப விட்டீங்கன்னா எங்களோட ஸ்லாட் 2027 ஜனவரி மாதம் தான்னு சொல்லிவிட்டார்கள். போட்ட பணம் திரும்ப வரணுமேன்னு நினைச்சுத் தான் தினேஷ்ராஜ்கிட்ட சொல்லி, வர்ற 10-ஆம் தேதி ரிலீஸ் பண்றோம்”
ஆர்.கே.செல்வமணி, “பத்து, இருபது வருசத்துக்கு முன்னால ஃபர்ஸ்ட் காப்பி ரெடியானதுமே தயாரிப்பாளர்கள் வினியோகஸ்தர்கள்கிட்ட பேசி, ரிலீஸ் தேதியை முடிவு பண்ணி, நேரடியா வியாபாரம் செய்து லாபம் பார்த்தார்கள். ஆனா இப்ப ஓடிடிக்காரன் தான் நம்ம படத்தோட ரிலீஸ் தேதியை முடிவு பண்றான். எந்த ஓடிடி ஆபீசும் இங்கே சென்னையில கிடையாது. எல்லாமே மும்பையில தான். இங்க இருக்கும் அவர்களின் ஆளு ஒருத்தர் மும்பைக்குப் போன் போட்டு அந்த ஓடிடியின் ஹெட்டிடம் பேசி இங்கே வரவச்சு படத்தைப் போட்டுக்காட்டி, அதுக்கப்புறம் ரிலீஸ் தேதியை முடிவு பண்றான். இதை மாத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் எல்லோரும் கூடிப்பேசி நல்ல முடிவு எடுக்கணும்”.
விழாவில் கலந்து கொண்ட விஐபிக்கள் அனைவரின் சிறப்பு, பெருமைகளை சில நிமிடங்கள் சொல்லிவிட்டு அதன் பின் பேச வருமாறு அழைப்பது தான் தொகுப்பாளினி கவிதாவின் டிரேட்மார்க்.
அந்த பெர்மெனென்ட் டிரேட் மார்க்படி ஹீரோ பவிஷை அழைக்கும் போது ‘ட்ரீம் ஸ்டார்’ என்ற பட்டம் கொடுத்து அழைத்து கோலிவுட்டில் புதிய திகிலைக் கிளப்பியுள்ளார் கவிதா.
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.