அங்குசம் பார்வையில் ‘ஹாய்’

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தயாரிப்பு: ‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ எஸ்.எஸ்.லலித்குமார் & ‘ரெளடி பிக்சர்ஸ்’ விக்னேஷ் சிவன், நயன்தாரா, டைரக்டர்: விஷ்ணு எடவன், ஆர்டிஸ்ட்: கவின், நயன்தாரா, கே.பாக்யராஜ், ராதிகா சரத்குமார், பிரபு, அம்ருதா சீனிவாசன், ஆதித்யா கதிர், ஃபெப்சி விஜயன், சுகாசினி, ரஞ்சி பணிக்கர், சத்யன், ஒளிப்பதிவு: ராஜேஷ் சுக்லா, இசை: ஜென் மார்ட்டின், எடிட்டிங்: பிலோமின் ராஜ், நடனம்: பிருந்தா, தினேஷ், ஆர்ட் டைரக்டர்: எஸ்.கண்ணன், பிஆர்ஓ: யுவராஜ்

எதுக்கெடுத்தாலும் அழுவது, அம்மா-அப்பாவிடம் கேட்டுச் சொல்றேன்னு சொல்வது, அதனால் நீ எனக்கு செட்டாகமாட்டேன்னு சொல்லிட்டு, மயில்சாமிக்கு[கவின்] டாட்டா காட்டிட்டு, வேற ஒரு பையனை கல்யாணம் பண்ண முடிவு பண்ணுது, மயில்சாமியின் முறைப் பொண்ணு. இதனால டென்ஷனாகும் மயில்சாமி,  அம்மா-அப்பாவிடம் சொல்லாமல் கோயம்புத்தூரிலிருந்து கிளம்பி சென்னைக்கு வர்றார். இங்கே வந்து தன்னைக் காதலிக்கும் பெண்ணை காதலித்து கல்யாணம் பண்ண வேண்டும் என நினைக்கிறார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

‘Hi’பிறந்து முகம் பார்க்கும் முன்பே வீட்டைவிட்டு ஓடிப் போனதால், அப்பா [பிரபு] குடிகாரனாக, அத்தையின் கட்டாயத்தால், அவளது மகனையே கல்யாணம் பண்ண கட்டாயப்படுத்துவதால், அத்தனை பேரையும் உதறித்தள்ளிவிட்டு, பொள்ளாச்சியிலிருந்து சென்னை ஓடி வருகிறார் தேவயானி[ நயன் தாரா]. பஸ் ஸ்டாப்பில் நிற்கும் தேவயானியை அழைத்து வர, மயில்சாமியை அனுப்புகிறார் தேவயானியின் தோழி. அங்கே அவரைப் பார்த்து “ஹாய்” சொல்லி அழைத்து வருகிறார் மயில்சாமி. இங்கே  தோழியின் வீட்டு மேல் போர்ஷனில்  தங்குகிறாள். அதே வீட்டின் கீழ் போர்ஷனில் தான் மயில்சாமியும் தங்கியிருக்கிறார்.

மயிலும் தேவயானியும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக் கொண்டார்களா? இதான் இந்த ‘ஹாய்’.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

தேவயானியைப் பார்த்ததுமே மயிலு லவ்வில் விழுந்துவிட்டாலும் அதைச் சொல்வதற்கு தயங்குகிறார். ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயல, அவரைக் காப்பாற்றுகிறார் தேவயானி. அதன் பின் தேவயானி, பணக்கார வீட்டு பெரிய மனுஷியைக் கவனிக்கும் வேலைக்குச் செல்கிறார். அந்த பெரிய மனுஷியின் மகன் ஃபெப்சி விஜயன், தேவயானியை லண்டனுக்கு கூட்டிப் போக  ஆசைப்படுகிறார். தேவயானியும் சம்மதிக்கிறார். இந்த நேரத்திலும் தேவயானியிடம் லவ்வைச் சொல்லும் முயற்சியில் தோற்றுப் போகிறார் மயில்சாமி.

‘Hi’இப்படியே போய்க்கிட்டிருக்கும் போது தான் வீட்டைவிட்டு ஓடிப்போன இருவரையும் தேடி, அவர்களது குடும்பம் சென்னைக்கு வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் தேவயானியை தான் காதலிப்பதாகவும் அவள் மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் பொய்க் குண்டை வீசுகிறார் மயில்சாமி. இதனால் அதிர்ச்சியாகிறது இரு குடும்பமும். அத்துடன் இடைவேளை விடுகிறார்கள்.

 அதன் பின் க்ளைமாக்ஸ் வரை குடும்பங்களுக்கிடையிலான சடுகுடு ஆட்டம் தான் படம்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

சோகமானாலும் கோபமானாலும் அதை காமெடி ட்ரீட்டுடன் வெளிப்படுத்தும் கவினின் நடிப்பு நல்லாவே கவர் பண்ணுது. செண்டிமெண்ட் சீனிலும் அளவான மீட்டரில் நடித்துள்ளார். நயனுடனான ஆரம்பக் காட்சிகளில் கலகலப்பாக இருக்கும் கவின், அவரைக் காதலிக்க ஆரம்பித்து, கோவைக்கு கூட்டி வந்த பின் பல்வேறு ஐடியாக்கள் போட்டு, நிஜமாகவே நயனைக் காதலிக்க வைக்க, பாகிஸ்தான் இஸ்லாமிய பெண்ணுடன் காதல் என்ற டூப்பை அள்ளிவிடுவது, நயனை கர்ப்பவதியாக காட்ட டாக்டர் விடிவி கணேஷை அழைத்து வருவது என கவினின் நடிப்பு கவனிக்க வைக்கிறது.

‘Hi’நயன் தாரா, எப்பவுமே நம்ம நயன் தாரா என்பதை இந்த ‘ஹாய்’-ல் மீண்டும் புரூஃப் பண்ணிவிட்டார். மஞ்சப் பையில் அரிவாளுடன் சென்னைக்கு வருவது, சென்னையில் இருக்கும் வரை கவினைக் கண்டு கொள்ளாமலேயே இருப்பது, குடிகார அப்பா பிரபுவைப் பற்றிச் சொல்லி அழுவது, கோவையில் கவின் வீட்டில் இருக்கும் போது, அவரைக் காதலிக்க ஆரம்பிப்பது, அப்பப்ப… கவினை கலாய்ப்பது என நயனின் நடிப்பு, ரொம்பவே நயமானது.

கவினின் அப்பாவாக வரும் கே.பாக்யராஜின் டிரேட் மார்க் சீன்கள் வரும் போதெல்லாம் தியேட்டரில் அப்ளாஷ் அள்ளுது. கவினின் அம்மாவாக ராதிகா சரத்குமாரும் நடிப்பில் குறை வைக்கவில்லை. நயனின் அப்பா பிரபு அடிக்கடி நயனிடம், “உங்க அம்மா கண்டிப்பா வருவா” என திரும்பத் திரும்பச் சொல்லும் போதே நமக்கு தெரிந்துவிடுகிறது, கண்டிப்பா அவர் வருவார்னு. நாம நினைச்சது போலவே க்ளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் சாமியாரிணியாக வருகிறார் நயனின் அம்மா சுகாசினி. இவரைத் தேடி கவின் கேரளாவுக்குப் போகும் சீன்கள் கொஞ்சம் ஜவ்வு தான்.

இடைவேளைக்குப் பிறகு முக்கால்வாசி சீன்களில் படத்தில் நடித்த முக்கிய கேரக்டர்களுடன் ஐம்பதுக்கும் மேற்பட்ட துணை நடிகர்களையும் களத்தில் இறக்கி கலகலப்புக்கு க்யாரண்டி தருகிறார் டைரக்டர் விஷ்ணு எடவன். கவினின் நண்பனாக வரும் ஆதித்யா கதிர், அப்பப்ப… டைமிங் காமெடியில் அசத்துகிறார். இரண்டு மெலோடிகளில் அசத்தும் ஜென் மார்ட்டின், பல சீன்களில் பின்னணி இசையில் ஓவர் சவுண்டாக்கிவிட்டார்.

டைரக்டர் விஷ்ணு எடவனுக்கு தாராளமாக ஒரு “ஹாய்” சொல்லி ஃப்ரண்ட் ரிக்வெஸ்ட் கொடுக்கலாம்.

அங்குசம் பார்வையில் ‘ஹாய்’ 47/100

—   ஆண்டவர்

  

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.