“பிரம்மாண்டமா பூஜை போடுறதே அதிசயம் தான்” – டைரக்டர் ஆர்.வி.உதயகுமார்
‘காவ்யா புரொடக்சன்ஸ்’ மஞ்சுநாத். & ‘எஸ்-2 மூவிஸ் இணைந்து தயாரிக்கும் ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் பூஜை சென்னை பிரசாத் லேப்பில் ஜூன்.26-ஆம் தேதி நடந்தது. கே.ஆர்.செந்தில்நாதன் டைரக்ட் பண்ணும் இப்படத்தில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலட்சுமி, யாஷிகா ஆன்ந்த், மெல்வின், ஒய்.ஜி.எம். மதுவந்தி, அஸ்மிதா, அமித்பார்கவ் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : ஷிஹாப் பட்டாம்பி, இசை : அச்சு ராஜாமணி, எடிட்டிங் : எஸ்.பி.அகமது, பி.ஆர்.ஓ : சரண்.
பூஜை நிகழ்ச்சியில் படத்தில் நடிக்கும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லியைத் தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக, அதிமுகவிலிருந்து சமீபத்தில் தவெகவுக்குத் தாவிய டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் கலந்து கொண்டார்.
வந்திருந்த அனைவரையும் வரவேற்று நன்றி சொன்னார் டைரக்டர் கே.ஆர்.செந்தில்நாதன்.
அமித்பார்கவ், “சினிமா தயாரித்து அதை ரிலீஸ் பண்ணுவது பெரிய பயணம். பல சவால்கள், தடைகளைக் கடக்க வேண்டியுள்ளது. விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தையும் அப்படித் தான் ஆரம்பிச்சிருக்கோம்”.

மதுவந்தி, யாஷிகா ஆனந்த், ரச்சிதா மகாலட்சுமி, அஸ்மிதா ஆகியோரும் இதே கருத்தைப் பேசி, டைரக்டர் செந்தில்நாதனின் உழைப்பையும் தயாரிப்பாளர் மஞ்சுநாத்தின் தன்னம்பிக்கையையும் பாராட்டிப் பேசினார்கள்.
ஆர்.வி.உதயகுமார், “இப்படி பிரம்மாண்ட பூஜையுடன் ஒரு சினிமாவை ஆரம்பிப்பதே அதிசயம் தான். சினிமா ஷூட்டிங்கில் இருக்கும் சவால்களைவிட அதை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய சந்திக்கும் சவால்கள் தான் அதிகம். அந்த சினிமாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பது அதைவிட சவால். இந்த ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ தயாரிப்பாளருக்கு நல்ல லாபமும் டைரக்டர் செந்தில்நாதனுக்கு நல்ல பேரும் கிடைக்க வாழ்த்துகிறேன்”.
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.