கையில் அல்வாவோட கலெக்டர பார்க்க வந்த ஆசாமி !
கையில் அல்வாவுடன் மதுரை கலெக்டரை சந்திக்க வந்த நபரால் ஆடிப்போனது ஆட்சியர் வளாகம். அல்வாவுடன் வந்த மதுரை செல்லூரை சேர்ந்த சங்கரபாண்டியனிடம் விசாரித்தோம். ”முதல்வர் சி.ஜோசப் விஜய் அதிகாரிங்க யாரும் இலஞ்சம் வாங்கக்கூடாதுனு சொல்றாரு. அப்படி வாங்கினா என்கிட்ட சொல்லுங்கனு சொல்றாரு. ஆனா, நேத்து சாயந்திரம் எனக்கு ஒருத்தம் போன் பண்ணி, மின்வாரியத்தில் 11 காலிப்பணியிடம் இருக்கு. அதில் AE , AD போஸ்டிங்கிற்கு 10லட்சம்; ரீடிங் மற்றும் அக்கவுண்ட்ஸ் பிரிவுக்கு 8 லட்சம் கொடு வேலை வாங்கித்தாரேன்னு பேசுறாங்க.
அதுமட்டுமில்லை, வருவாய்த்துறையில் உதவியாளருக்கு 8 லட்சமாம். எக்ஸாம் எழுதத்தேவையில்லையாம். எழுதியது மாதிரி ரெடி பண்ணிடுவாங்களாம். இருபதாயிரம் அட்வான்ஸ் மட்டும் கொடுத்தா போதும்னு சொல்றாங்க. அதான் அந்தமாதிரி யாரை நம்பியும் காசு கொடுத்து ஏமாந்திராதீங்கனு விழிப்புணர்வை ஏற்படுத்ததான் அல்வாவோட வந்தேனு” சங்கரபாண்டியன் கொடுத்த விளக்கத்த கேட்டு முடிக்கிறப்போ, நமக்கே கொஞ்சம் தலை சுற்றத்தான் செய்தது.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.