அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நீட் தேர்வு விவகாரம்: “போராட்டத்தில் புகுந்து அரசியல் செய்பவர்கள் மீது அதிரடி நடவடிக்கை!” – அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ரமேஷ்:

சமயபுரம் மற்றும் பழனி உள்ளிட்ட கோவில்களில் அலுவலர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு:

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

சமயபுரம் கோவிலில் பணியில் இருந்த மணியக்காரா் பழனிவேல் என்பவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாக எழுந்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை நேர்மையாக நடைபெற்று குற்றங்களை கண்டறியும் பொருட்டு, நிர்வாக ரீதியான நடவடிக்கையாக அவர் தற்காலிகமாகச் சஸ்பென்ட்  செய்யப்பட்டுள்ளார். விசாரணையின் முடிவில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சி அரசு மருத்துவமனையில் எலி நடமாட்டம் குறித்த கேள்விக்கு:

யாவரும் கேளீர்

அரசு மருத்துவமனைகளில் எலி நடமாட்டம் குறித்த புகார்கள் தொடர்பாக உரிய ஆய்வுகள் நடத்தப்பட்டு, உள்கட்டமைப்பில் (உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஸ்ரீரங்கத்தில் புதிய அரசு மருத்துவமனை கட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. பழைய இடத்தில் அமைப்பதா அல்லது புதிய இடத்தைத் தேர்ந்தெடுப்பதா என்பது ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. இறுதி முடிவு வெளிப்படையாக அறிவிக்கப்படும்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பல்லாண்டு காலம் நீடித்து நிலைத்து, மக்களுக்கான அனைத்து மருத்துவ வசதிகளையும் வழங்கக்கூடிய வகையில் புதிய மருத்துவமனை உலகத்தரம் வாய்ந்ததாக உருவாக்கப்படும். இதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் குறித்து தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

பழனி கோவில் நில விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு:

பழனி கோவில் நிலப் பதிவு விவகாரத்தில் தனது மீதும், அரசின் மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை.

பழனியில் ஒரு நிலம் உள்ளது, அந்த நிலத்தின் மதிப்பு ₹.100 கோடி மதிப்பு பெறும் என இந்த வழக்கிற்குப் பிறகுதான் தனக்கே தெரியவந்தது. ஜூன் 30-ஆம் தேதியே ஹெச்.ஆர்.என்.சி மூலமாக மேல்முறையீடு செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் மூலம் அந்த நிலம் மீட்கப்பட்டுள்ளது. நிலப் பதிவு ஜூலை 7-ஆம் தேதி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தை உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று முதலமைச்சரிடம் கூறியது நான்தான். தற்போது சிபிசிஐடி முதற்கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர். உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்.

நீட் தேர்வு மற்றும் மாணவர்களின் போராட்டம் குறித்த கேள்விக்கு:

நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டங்களுக்கு அரசு நியாயமான ஆதரவைத் தெரிவித்துள்ளதாக முதலமைச்சர் தனது இணையதளத்தில் தெளிவாகப் பதிவிட்டுள்ளார். நீட் தேர்வை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும், கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே தவெக அரசின் நிரந்தரத் தீர்வாகவும் நிலைப்பாடாகவும் உள்ளது. மாணவர்களின் போராட்டத்தை அரசு மதிக்கிறது; ஆனால், இதற்குள் புகுந்து முதலமைச்சருக்கு எதிராகத் திசைதிருப்ப முயல்பவர்களை அரசு உரிய முறையில் எதிர்கொள்ளும் என தெரிவித்தார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.