அதிகாரிகள் இன்னும் திருந்தவில்லை !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

இன்று எங்கள் வீட்டின் அருகில் தெரிந்த நபர் ஒருவர் அபார்ட்மெண்ட் கட்ட பூமி பூஜை போட்டார். அவரிடம் CMDA அப்ரூவல் லஞ்சம் கொடுக்காமல் வாங்கினீர்களா? என கேட்டேன். அதிகாரிகள் இன்னும் திருந்தவில்லை. யூனியன் அலுவலகத்தில் ஒரு கிச்சனுக்கு 15000 வாங்கி விட்டனர் எனவும்; உள்ளாட்சி அலுவலகத்தில் ஒரு கிச்சனுக்கு 25000 வாங்கி விட்டனர் எனவும்; மொத்தமாக 6 கிச்சனுக்கு 2.4 லட்சம் லஞ்சமாக அளிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அந்த நபரின் குடும்பம் முழுவதும் விஜய்க்கு வாக்களித்தவர்கள். அமைச்சர்கள் லஞ்சம் வாங்கவில்லை என செய்திகள் வந்தாலும், கடைநிலை அதிகாரிகள் எப்போதும் போல லஞ்சம் வாங்கி குவிக்கின்றனர் என கூறினார். லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யலாமே? என கூறியதற்கு, அந்த அளவிற்கு எனக்கு தைரியம் இல்லை. எதற்கு தேவையில்லா வம்பு என கூறினார். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என மனதில் நினைத்து கொண்டேன்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

– RK. புகழ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.