சவாலான இரட்டைக் கர்ப்பம்… பாதுகாப்பான சுகப்பிரசவம்! தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி சாதனை !
திருச்சி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஒரே வாரத்தில் நான்கு தாய்மார்களுக்கு இயற்கை சுகப்பிரசவம் (Normal Vaginal Delivery) மூலம் இரட்டைக் குழந்தைகள் வெற்றிகரமாகப் பிறந்துள்ளன. பிரசவத்திற்குப் பின்னர் தாய்மார்களும் குழந்தைகளும் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.
இரட்டைக் கர்ப்பம் என்பது தாய் மற்றும் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு கூடுதல் கண்காணிப்பும், சிறப்பு மருத்துவக் கவனமும் தேவைப்படும் ஒரு சவாலான நிலையாகும். இந்நிலையில், அனுபவமிக்க மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்படும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினரின் ஒருங்கிணைந்த தீவிர கண்காணிப்பில் அனைத்துப் பிரசவங்களும் பாதுகாப்பாக மேற்கொள்ளப்பட்டன.
தாய்மார்களின் உடல்நிலை மற்றும் கருவில் உள்ள குழந்தைகளின் நலன், பிரசவத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் கவனமாகக் கண்காணிக்கப்பட்டு, இயற்கை சுகப்பிரசவம் மூலம் பாதுகாப்பாகப் பிரசவம் பார்க்கப்பட்டது. பிரசவத்திற்குப் பிறகும் தாய்மார்களும் குழந்தைகளும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, நல்ல உடல்நலத்துடன் இல்லம் திரும்பினர்.
இந்த வெற்றிகரமான மருத்துவச் சாதனை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கையில்:
”ஒவ்வொரு கர்ப்பிணித் தாய்க்கும் பாதுகாப்பான, தரமான மற்றும் அன்பான மகப்பேறு சேவையை வழங்குவதே மருத்துவமனையின் முதன்மை நோக்கமாகும். தாய் மற்றும் சேயின் நலனே எங்களின் முதன்மையான முன்னுரிமை.”
மேலும், தங்களின் மீது முழு நம்பிக்கை வைத்து சிகிச்சை பெற்றுச் சென்ற குடும்பத்தினருக்கு மருத்துவமனை நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
“ஆரோக்கியமான தாய் • ஆரோக்கியமான குழந்தை • மகிழ்ச்சியான குடும்பம்” என்ற உன்னத நோக்கத்துடன் மகப்பேறு சேவைகள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஒரே வாரத்தில் நான்கு தாய்மார்களுக்கு இயற்கை சுகப்பிரசவம் (Normal Vaginal Delivery) மூலம் இரட்டைக் குழந்தைகள் வெற்றிகரமாகப் பிறந்துள்ளன. பிரசவத்திற்குப் பின்னர் தாய்மார்களும் குழந்தைகளும் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.