அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தவெக soft-ஆக இருந்தால் பாஜகவும் soft-ஆக இருப்போம் – தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த பின்னர் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் அளித்த பேட்டி….

மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு பணிகளில் அவசரம் வேண்டாம். அடுத்த மாதம் குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில் இன்னும் பல பணிகள் முடிவடையாமல் உள்ளது. இதை நாங்கள் சுட்டிக்காட்டுவது பக்தியால் தான் பகையால் அல்ல. மதுரை குப்பை மாநகரமாக உள்ளது. குப்பையில்கூட ஊழல் செய்கிறார்கள். அதை இந்த அரசு கவனம் செலுத்த வேண்டும்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

தென்மாநில முதலமைச்சர் மாநாடு ஆரோக்கியமான ஒன்று மத்திய அரசுக்கு தென் மாநிலங்களை பற்றி கவலையில்லை என்று சொல்வார்கள். ஆனால் அமித்ஷா தென் மாநிலங்கள் மீது கவனம் செலுத்துகிறார். கோதாவரி காவிரி இணைப்பு விவகாரத்தில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. தொகுதி மறுவரை விவகாரத்தில் விஜய் பல்டி அடித்து விட்டார் என விமர்சிக்கிறார்கள். சரியான விகிதாசாரம் பின்பற்றப்பட வேண்டும் என்று அவர் சொன்னதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? தொகுதி மறுவரையில் அரசியல் செய்யாதீர்கள் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மூலம்தான் அவர்களுக்கான வாய்ப்பை உறுதி செய்ய முடியும். எந்த விதத்திலும் தமிழகத்தின் சதவிகிதம் குறையாது என அமித்ஷா சொல்லியுள்ளார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

கொடுத்ததெல்லாம் கொடுத்தார் என தவெக பெண் எம்.எல்.ஏ பாடினார். இருப்பவருக்கே கொடுப்பது சரியா? … கார் இருப்பவர்களுக்கே கார் கொடுப்பது என்ன மாதிரியான அணுகுமுறை? மக்கள் பணத்தை சரியாக பயன்படுத்துங்கள். முதலமைச்சர்கள் மாநாட்டில் காவிரி விவகாரம் குறித்து முதல்வர் பேசவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? அவர் பேசியிருக்கலாம் பல செய்திகள் வெளியே வராமல் கூட போயிருக்கலாம். காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை முதல்வர் விஜயும் மத்திய அரசும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

(தவெக soft-ஆக இருந்தால் பாஜகவும் soft-ஆக இருப்போம்). (அவர்கள் கடுமையாக இருந்தால் நாங்களும் கடுமையாக இருப்போம் ) திமுக போல் எதற்கெடுத்தாலும் சண்டை போட கூடாது. கடந்த ஆட்சிமாதிரி எதற்கெடுத்தாலும் கடுமையாக இருந்தால் நல்லதில்லை. கொள்கை ரீதியாக மாறுபட்டாலும் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்போம் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் மாற்றமா என்றகேள்விக்கு …. அதெல்லாம் எதுவும் கிடையாது டெல்லிக்கு போனாலே இப்படி நினைப்பீர்களா?” என்றார்.

—  ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.