திமுக மா.செ. பதவியை தக்கவைத்துக்கொள்ளும் அதிர்ஷ்டசாலிகள் யார் யார் ?
அதிரடி மாற்றமாக, திமுக செயற்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானத்தின்படி, தற்போது இருக்கும் 78 மாவட்ட செயலாளர்களில், யார், யார் பதவியை தக்க வைத்துக் கொள்ளப்போகிறார்கள் என்ற கேள்வி திமுக வட்டாரத்தில் எழுந்திருக்கிறது.
70 வயதுக்கு குறைவானவர்களாகவும்; தொடர்ந்து 15 வருடங்களுக்கு கீழாகவும் 54 மா. செ.க்கள் இருக்கிறார்கள். செயற்குழு தீர்மானத்தின் அடிப்படையில் இவர்கள் மா.செ.க்களாக தொடரும் வாய்ப்பை பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
1) சென்னை கிழக்கு பி கே சேகர்பாபு (63) 2014 டிசம்பர் முதல் – 11 வருடம், 8 மாதம்.
2) சென்னை மேற்கு மாவட்டம் நே. சிற்றரசு (48) 2020, ஜூலை – 6 வருடம்
3) சென்னை வடக்கு மாவட்டம் ஆர் டி சேகர் (60) 2011, ஜூலை-2015 2024, பிப்ரவரி – 7 வருடம், 6 மாதம்.
4) சென்னை தெற்கு மாவட்டம் மா. சுப்ரமணியம் (67) 2014, டிசம்பர் முதல் – 11 வருடம், 8 மாதம்.
5) சென்னை வடகிழக்கு மாதவரம் எஸ் சுதர்சனம் (67) 2011 – 2015 திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர். 2015 – சென்னை வடகிழக்கு மாவட்டம் தற்போது வரை 15 வருடம்.
6) சென்னை தென்மேற்கு மாவட்டம் தா. வேலு (55) 2022, செப்டம்பர் முதல் 4 வருடம்.
7) திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ் (61) 2025,பிப்ரவரி 1 வருடம் 6 மாதம்.
8) திருவள்ளூர் மேற்கு எஸ் சந்திரன் (62) 2022, செப்டம்பர் முதல் – 4 வருடம்.
9) திருவள்ளூர் மத்திய மாவட்டம் கா. மு. நாசர் (67) 2014, டிசம்பர் முதல் – 11 வருடம், 8 மாதம்.
10) திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் எம் எஸ் தரணி வேந்தன் (61) 2020, பிப்ரவரி முதல் – 6 வருடம், 6 மாதம்.
11) கடலூர் மேற்கு மாவட்டம் சி. வி. கணேசன் (67) 2014, டிசம்பர் முதல் – 11 வருடம், 8 மாதம்.
12) வேலூர் மத்திய மாவட்டம் டி எம் கதிர் ஆனந்த் (51) 2025, நவம்பர் முதல் – 10 மாதங்கள்
13) வேலூர் தெற்கு மாவட்டம் ஏபி நந்தகுமார் (58) 2011, டிசம்பர் முதல் – 14 வருடம், 8 மாதம்.
14) விழுப்புரம் மத்திய மாவட்டம் லட்சுமணன் (54) 2025, நவம்பர் முதல் – 1 வருடம், 6 மாதம்.
15) விழுப்புரம் தெற்கு மாவட்டம் பொன் கௌதம சிகாமணி (52) 2024, ஜூன் முதல் – 2 வருடம், 2 மாதம்.
16) கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் தா. உதயசூரியன் (63) 2020, ஆகஸ்ட் முதல் – 6 வருடம்.
17)கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம் வசந்தம் கார்த்திகேயன் (49) 2020, ஆகஸ்ட் முதல் 6 வருடம்.
18) சேலம் மேற்கு மாவட்டம் டி எம் செல்வகணபதி (67) 2020, பிப்ரவரி முதல் – 6 வருடம், 6 மாதம்.
19) சேலம் மத்திய மாவட்டம் ஆர். ராஜேந்திரன் (67) 2014, டிசம்பர் முதல் 11 வருடம், 8 மாதம்.
20) தர்மபுரி கிழக்கு மாவட்டம் ஆ. மணி (58) 2025, மார்ச் முதல் – 1 வருடம், 5 மாதம்.
21) தர்மபுரி மேற்கு மாவட்டம் பெ. பழனியப்பன் (65) 2022, செப்டம்பர் முதல் -4 வருடம்.
22) கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் தே. மதியழகன் (60) 2022, செப்டம்பர் முதல் – 4 வருடம்.
23) கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஒய். பிரகாஷ் (62) 2014, டிசம்பர் முதல் – 11 வருடம், 8 மாதம்.
24) நாமக்கல் கிழக்கு மாவட்டம் கே ஆர் என் ராஜேஷ்குமார் (49) 2020, பிப்ரவரி முதல் – 6 வருடம், 6 மாதம்.
25) நாமக்கல் மேற்கு மாவட்டம் கே எஸ் மூர்த்தி (64) 2014, டிசம்பர் முதல் – 2022 செப்டம்பர் வரை 2025, பிப்ரவரி முதல் – 8 வருடம்,6 மாதம்.
26) ஈரோடு வடக்கு மாவட்டம் N. நல்லசிவம் (59) 2014, டிசம்பர் முதல் – 11 வருடம், 8 மாதம்.
27) திருப்பூர் வடக்கு மாவட்டம் N. தினேஷ்குமார் (48) 2022, செப்டம்பர் முதல் – 4 வருடம்.
28) திருப்பூர் தெற்கு மாவட்டம் K. ஈஸ்வர சாமி (50) 2025, நவம்பர் முதல் – 9 மாதங்கள்.
29) திருப்பூர் கிழக்கு மாவட்டம் இல. பத்மநாபன் (55) 2014, டிசம்பர் முதல் – 11 வருடம், 8 மாதம்.
30) கோவை மாநகரம் துரை செந்தமிழ் செல்வன் (38) 2022, செப்டம்பர் முதல் 4 வருடம்.
31) கோவை வடக்கு மாவட்டம் ஆ. ரவி (67) 2022, செப்டம்பர் முதல் – 4 வருடம்.
32) கோவை தெற்கு மாவட்டம் தளபதி முருகேசன் (65) 2022,செப்டம்பர் முதல் – 4 வருடம்.
33) நீலகிரி மாவட்டம் கே எம் ராஜு (61) 2025,பிப்ரவரி முதல் – 1 வருடம், 6 மாதம்.
34) கரூர் மாவட்டம் வி. செந்தில் பாலாஜி (51) 2019, ஜனவரி முதல் – 7 வருடம், 7 மாதம்.
35) திருச்சி வடக்கு மாவட்டம் என் தியாகராஜன் (66) 2014, டிசம்பர் முதல் – 11 வருடம், 8 மாதம்.
36) திருச்சி தெற்கு மாவட்டம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (49) 2022, ஜனவரி முதல் – 4 வருடம், 8 மாதம்.
37) திருச்சி மத்திய மாவட்டம் வைரமணி 2022, செப்டம்பர் முதல் – 4 வருடம்.
38) புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கேகே.செல்ல பாண்டியன் (58) 2016, செப்டம்பர் முதல் – 10 வருடம்.
39) பெரம்பலூர் மாவட்டம் ஜெகதீசன் 2024, பிப்ரவரி முதல் – 2 வருடம்,7 மாதம்
40) தஞ்சை தெற்கு மாவட்டம் த. பழனிவேல் (74) 2025,பிப்ரவரி முதல் – 1 வருடம், 6 மாதம்.
41) தஞ்சாவூர் மத்திய மாவட்டம் துரை சந்திரசேகரன் (67) 2011 – 2014 டிசம்பர் வரை தஞ்சை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர். 2014, டிசம்பர் முதல் – தற்போது வரை தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர். 15 வருடம்.
42) நாகை மாவட்டம் என் கௌதமன் (60) 2016,ஜூன் முதல் – 10 வருடம், 3 மாதம்.
43) மயிலாடுதுறை மாவட்டம் நிவேதா எம் முருகன் (61) 2016, ஆகஸ்ட் முதல் 10 வருடம்.
44) திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் ஐ பி செந்தில்குமார் (49) 2014, டிசம்பர் முதல் 11 வருடம், 8 மாதம்.
45) தேனி வடக்கு மாவட்டம் தங்க தமிழ்ச்செல்வன் (65) 2020, அக்டோபர் முதல் – 5 வருடம், 10 மாதம்.
46) மதுரை தெற்கு மாவட்டம் சேடப்பட்டி மு. மணிமாறன் (52) 2014, டிசம்பர் முதல் – 11 வருடம், 8 மாதம்.
47) இராமநாதபுரம் மாவட்டம் காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் (55) 2018, ஜூலை முதல் – 8 வருடம், 1 மாதம்.
48)தூத்துக்குடி வடக்கு மாவட்டம் பெ. கீதா ஜீவன் (56) 2017, ஜூன் முதல் – 9 வருடம்,2 மாதம்.
49)நெல்லை மத்திய மாவட்டம் அப்துல் வகாப் (59) 2014, டிசம்பர் முதல் – 2023, மே வரை 2025, பிப்ரவரி முதல் – 11 வருடம், 1 மாதம்.
50) நெல்லை கிழக்கு மாவட்டம் மு. கிராகம் பெல் (63) 2025,செப்டம்பர் முதல் – 1 வருடம்.
51 ) தென்காசி வடக்கு மாவட்டம் ஈ. ராஜா (41) 2022, செப்டம்பர் முதல் – 4 வருடம்
52) தென்காசி தெற்கு மாவட்டம் வி. ஜெயபாலன் (52) 2023, ஜூலை முதல் – 3 வருடம்.
53) கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் ரெ. மகேஷ் (61) 2022, செப்டம்பர் முதல் – 4 வருடம்.
54) கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் த. மனோ தங்கராஜ் (59) 2014, டிசம்பர் முதல் – 11 வருடம், 8 மாதம்.
– அங்குசம் செய்திப்பிரிவு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.