முதல்முறை என்பது முதல்முறையல்ல!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

‘முதல் முறை’என்று மிகை விளம்பரம் செய்யப்பட்டாலும்,  தற்காலிக சபாநாயகராக பல பெண்கள்  இதற்கு முன்பும் பொறுப்பேற்று அவையை நடத்தியிருக்கிறார்கள்.

ஒரு மரபு  இருக்கிறது

இந்த வார அங்குசம் வார இதழில்…

ஒவ்வொரு சட்டமன்றக் கூட்டத்தொடரின் தொடக்கத்திலும் சபாநாயகரால் 4 முதல் 6 உறுப்பினர்கள் அடங்கிய மாற்றுத் தலைவர்கள் குழு முறைப்படி அறிவிக்கப்படும். அதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் இதர கட்சிகளைச் சேர்ந்த மூத்த மற்றும் திறமையான சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். அந்த க்குழுவில் உள்ள உறுப்பினர்கள்  சுழற்சி முறையில்  அவையை நடத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

கடந்த காலங்களில் இப்படி பல பெண் சட்டமன்ற உறுப்பினர்கள்  அவையை திறம்பட நடத்தியிருக்கிறார்கள்.

காங்கிரஸ் மற்றும் த.மா.கா சார்பில் 7 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த மூத்த பெண் தலைவர் ஏ. எஸ் பொன்னம்மாள்,  பேரவைத் தலைவர்கள் குழுவில் இடம்பெற்று பலமுறை சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை திறம்பட நடத்தியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட்  (மார்க்சிஸ்ட் )கட்சியின் மூத்த தலைவரான பாப்பா உமாநாத் , 1980 மற்றும் 1989-ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது  மாற்றுத் தலைவராக அவையை நடத்திய வரலாறு இருக்கிறது

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

திமுகவின் முக்கியப் பெண் உறுப்பினர்களான கீதா ஜீவனும் பூங்கோதை ஆலடி அருணாவும்

மாற்றுத் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்று அவையின் நடவடிக்கைகளை  வழிநடத்தியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான விஜயதரணி, சட்டமன்றக் கூட்டத்தொடர்களின் போது பலமுறை தலைவர்கள் குழுவில் இருந்து சபாநாயகர் நாற்காலியை அலங்கரித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான பாலபாரதி , சட்டமன்ற விவாதங்களின் போது சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையைக் கட்டுப்பாட்டுடன் நடத்தியுள்ளார்.

ஆகவே, முதல்முறை என்பது முதல்முறையல்ல.

—   லட்சுமணசாமி ரங்கசாமி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.