அரசியலில் திசை மாறும் கட்சிகள் !

அரசியல் அலசல்

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

கடந்த மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.  கடந்த 2024 தேர்தலில் பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் வரவிருக்கும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நான்காவது முறையாக ஆட்சியமைக்க பாஜக பல வியூகங்களை வகுத்து வருகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தின் மூலம் மாநிலங்களுக்கும் பாராளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் பாஜக வெற்றி பெற முடியும் என்று கருதிய போதும் இதற்கான அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவர போதிய உறுப்பினர்கள் இல்லாததால் வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலுடன் பாஜக ஆளும் 22 மாநிலங்களுக்கும் ஒன்றாகத் தேர்தல் நடத்தும் திட்டத்தை பாஜக பரிசீலித்து வருகிறது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

தொகுதி மறுவரையறை (Delimitation) :

தற்போது தொகுதி மறுவரையறை மூலம் பாராளுமன்ற இடங்களை அதிகரிக்க பாஜக தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டி இம்மசோதாவைத் தோற்கடிக்கும் முயற்சியில் அன்றைய தமிழ்நாட்டின் முதல்வர் மு. க. ஸ்டாலின் வெற்றி பெற்றார். மீண்டும் இம் மசோதாவைக் கொண்டு வரும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

பாஜகவுக்கே பயன் :

தற்போது உள்ள நாடாளுமன்றத் தொகுதிகள் 543.இது 846 ஆக அதிகரிக்கப்படும். இவ்வாறு அதிகரிப்பது மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் அமைந்தால் இந்தி பேசும் வட மாநிலங்களில் தொகுதிகள் அதிகமாகவும் மக்கள் தொகை குறைவாக உள்ள தென் மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தொகுதிகள் குறைவாகவும் இருக்கும் என்பதால் இலகுவாக பாஜக வெற்றிபெற முடியும். வட மாநிலங்கள் மட்டுமே வெற்றியைத் தீர்மானிக்கும் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக எதிர்க்கின்றன.

தேர்தல் ஆணையம் :

தொகுதி மறுவரையறை மூலம் தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமல்ல தொகுதிகளின் எல்லைகளும் மாற்றியமைக்கப்படும். இந்த மாற்றங்கள் பாஜகவுக்கு ஆதரவாகத் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும்.

தேர்தல் ஆணையத்தின் மூலம் வாக்காளர் பட்டியலை முழுமையாகப் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக செயல்படுவதாக எதிர்க் கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

தமிழக  அரசியலில்…

அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் – திமுக இடையே கசப்புணர்ச்சி ஏற்பட்டுவிட்டது. தேர்தலுக்குப்பின், காங்கிரசுடனான  உறவை திமுக முறித்துக் கொண்டதுடன் இந்தியா கூட்டணியிலிருந்தும் விலகியது. இந்நிலையில் தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டுக்குரிய 7.2 சதவீத இடங்கள் தமிழ்நாட்டுக்கு உறுதிப்படுத்தப்பட்டால் இம் மசோதாவை ஆதரிப்பது என்ற நிலைக்கு திமுக வந்துள்ளது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தடம் மாறிய தவெக :

அண்மையில் தென் மாநிலங்களின் முதல்வர்கள் மாநாடு சென்னையில் நடந்தது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். இம் மாநாட்டில் தொகுதி மறுவரையறையை தவெக முற்றிலும் எதிர்க்கவில்லை. மாறாக உரிய சதவீத இடங்கள் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற திமுகவின் நிலைப்பாட்டையே தவெக முன் வைத்தது. இதன் விளைவாக தவெக  – காங்கிரஸ் உறவில் சிறிய விரிசல் ஏற்பட்டது.

பிரதமர் ஆவாரா விஜய் :

அண்மைக் காலமாக இந்தியாவின் பிரதமராக விஜய் வரப் போகிறார் என்று அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பேசிவருகின்றனர். பிரதமர் கனவில் உள்ள ராகுல் காந்தி, தவெக மீது மிகவும் கடுமையான அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

காக்ரோச் ஜனதா கட்சி – CJP  :

இந்திய அரசியலில் புத்தெழுச்சியாக வந்துள்ள காக்ரோச் ஜனதா கட்சி நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ளது. இக்கட்சி பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளையும் ஆதரிக்கவில்லை. தனியாகக் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்டப்  பல மாநிலக் கட்சிகள் இக் கூட்டணியில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியத் தேர்தல் களம் நான்கு முனைப் போட்டியை சந்திக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. பாஜக,காங்கிரஸ், காக்ரோச், விஜய்,  என்ற நான்கு முனைப்போட்டியில் யார் வெல்வார் என்று அறுதியிட்டுக் கூறமுடியாது.

மாற்றம் வருமா.. மத்தியில்?

வரவிருக்கும் 2029 நாடாளுமன்றத் தேர்தல் மிகக் கடுமையான சவால் நிறைந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

பாஜகவுக்கும் காக்ரோச் ஜனதா கட்சிக்கும் இடையிலானப் போட்டியாகவே இது அமையும். மாநில அரசியலில் விட்டுக் கொடுப்பதன் மூலம் பாஜகவை எதிர்க்கும் மாநிலக் கட்சிகளை அரவணைத்து மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் பக்குவம் காங்கிரஸ் தலைமையிடம் இல்லை. திமுகவைப் பகைத்துக் கொண்டது போல பல்வேறு முதன்மையான மாநிலக் கட்சிகளுடன் நல்லுறவு காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. எனவே காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்திற்கேத் தள்ளப்படும்.

இத்தகைய அரசியல் சூழலில் ஜனநாயக விழுமியங்களையும் மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதிக் கொள்கைகளையும் இலக்காகக் கொண்ட ஒன்றிய அரசை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

– தமிழகன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.