தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் ‘ஸ்மார்ட்டத்தான் 26’ ஹேக்கத்தான் போட்டி துவக்கம்
திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளியில் உள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை (AI&DS), ‘நிறுவன கண்டுபிடிப்பு கவுன்சில்’ (IIC) உடன் இணைந்து ‘ஸ்மார்ட்டத்தான் 26′ (என்ற 24 மணி நேர தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டியைத் துவக்கியுள்ளது.
இப்போட்டியானது ‘Neyes Infotech Solutions’ நிறுவனத்தின் கூட்டு ஆதரவுடன், “கண்டுபிடி, உருவாக்கு, போட்டியிடு” (Innovate, Create, Compete) என்ற மையக் கருத்துடன் நடத்தப்படுகிறது.
பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சி. கே. ரஞ்சன் மற்றும் பதிவாளர் டாக்டர் எஸ். செல்வக்குமார்ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் ஆலோசகராக விளங்கினர்.
பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளியின் டீன் டாக்டர் எஸ். பத்மப்ரியாதலைமையில், துறை உதவிப் பேராசிரியர்கள் திருமதி. எம். ஜெயஸ்ரீ, திருமதி. பி. அனிதா மற்றும் திருமதி. சி. மெர்லின் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்து பங்கேற்றுள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் கண்டுபிடிப்பாளர்கள், 24 மணி நேரமும் தொடர்ச்சியாகத் தங்களின் புதிய தொழில்நுட்ப ஐடியாக்கள் மற்றும் தீர்வுகளை முன்வைத்து இப்போட்டியில் களமிறங்கியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறைகளில் மாணவர்களின் திறனை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வகையில் இந்த ஹேக்கத்தான் அமைந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியின் தொடர்ச்சியாக, நாளை (செப்டம்பர் 10) நடுவர் குழுவினரால் சிறந்த கண்டுபிடிப்புகள் மற்றும் செயல்திட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதனைத் தொடர்ந்து நடைபெறும் நிறைவு விழாவில், வெற்றி பெற்ற அணிகளுக்குச் சிறப்புப்பரிசுத் தொகைகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளன.






Comments are closed, but trackbacks and pingbacks are open.