திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் “மறைமலையடிகளின் 150ஆவது பிறந்தநாள் விழா” கருத்தரங்கம்

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் – சாகித்திய அகாடமியும் திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழாய்வுத்துறையும் இணைந்து நிகழ்த்திய “மறைமலையடிகளின் 150ஆவது பிறந்தநாள் விழா” எனும் பொருண்மையிலான கருத்தரங்கம் (செப்.16) புதன் கிழமையன்று கல்லூரிக் கருத்தரங்க அறையில் நடைபெற்றது.

இவ்விழாவுக்குக் கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர் சி.ரவிதாஸ் அவர்கள் தலைமை வகித்தார். கருத்தரங்க அமர்வுக்கு முனைவர் கடவூர் மணிமாறன் அவர்கள் தலைமை தாங்கினார். தலைமையுரையில் அவர் பேசியதாவது: “நம் தாய்மொழியாம் தமிழ்மொழி எத்தகைய தொழில்நுட்ப உலகிலும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்த மொழி! கணினி யுகத்திலும் இன்றைய ஏஐ தொழில்நுட்ப உலகத்திலும் சீரிய நடைபோடும் செம் மொழி நம்மொழி!இன்றைய இளைய தலைமுறையினர் நம் தாய்மொழியைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் முனைப்புக் காட்டுவதே தாய்மொழிக்கு நீங்கள் செய்யும் பெருந்தொண்டு தமிழின் தனித்தன்மையை உலகில் நிலைநாட்டிய மறைமலையடிகள்  உள்ளிட்ட தமிழறிஞர்களின் வரலாற்றைக் காலந்தோறும் நினைவுகூர்தல் அடுத்தடுத்த தலைமுறையினரின் கடமை”.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தொடர்ந்து, திருச்சி வட்டாரத் தனித்தமிழ் அறிஞர் முனைவர் பி.தமிழகன் அவர்கள் மறைமலையடிகளின் நடையியல்எனும் தலைப்பிலும், மற்றும் மதுரை – தியாகராசர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் மா.பரமசிவன் அவர்கள் உரையாசிரியர் மறைமைலையடிகள்எனும் தலைப்பிலும் ஆய்வுரை வழங்கினர்.

விழாவின் மையமாக, மறைமலையடிகள்-150 எனும் தலைப்பில் ஆய்வு மலர் முன்னதாக, தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் பா.இராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.முனீஸ்மூர்த்தி நன்றி கூறினார். முனைவர் பட்ட ஆய்வாளர் சக.மானேசா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

இந்நிகழ்வில் திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர் மாவட்டத்திற்குட்பட்ட கல்லூரி, பல்கலைக்கழகத்திலிருந்து முதுகலை மாணவர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.