தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில்“அக்ரி டெக்னோவா–2026” சர்வதேசக் கருத்தரங்கம்

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில்“அக்ரி டெக்னோவா–2026” சர்வதேசக் கருத்தரங்கின் முதல் நாள் சிறப்பாக நடைபெற்றன

திருச்சிசமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேளாண் அறிவியல் புலம் சார்பில் நடத்தப்படும் “அக்ரி டெக்னோவா–2026” இரண்டு நாள் சர்வதேசக் கருத்தரங்கின் முதல் நாள் நிகழ்வுகள் 24 செப்டம்பர் 2026 அன்று சிறப்பாக நடைபெற்றன.

இந்த வார அங்குசம் வார இதழில்…

“வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், பட்டுப்புழு வளர்ப்பு, கால்நடை மற்றும் விலங்கு அறிவியல், மீன்வள அறிவியல், உணவுத் தொழில்நுட்பம், ஊட்டச்சத்து, உயிரித் தொழில்நுட்பம், உயிரியல் அறிவியல் மற்றும் தொழில்முனைவில் முன்னோடி ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளும் அண்மைக்கால முன்னேற்றங்களும்” என்ற மையக் கருத்தில் இச்சர்வதேசக் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.

தொடக்க விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் சி. கே ரஞ்சன் மற்றும் பதிவாளர் முனைவர் எஸ் . செல்வகுமார் ஆகியோர் தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர்  வே. பாலகிருஷ்ணன், ஐ.பி.எஸ்., தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு கருத்தரங்கைத் குத்துவிளக்கு ஏற்றி  தொடங்கிவைத்துச் சிறப்புரையாற்றினார்.

Dhanalakshmi srinivasan universityதமது சிறப்புரையில், இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் வேளாண் துறையின் வளர்ச்சிக்கு அறிவியல் ஆராய்ச்சிகளும் நவீனத் தொழில்நுட்பங்களும் மிகவும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். விவசாயிகளின் உற்பத்தித் திறனையும் வருமானத்தையும் அதிகரிப்பதற்கு புதிய தொழில்நுட்பங்கள், தரமான விதைகள், நவீனப் பாசன முறைகள், இயந்திரமயமாக்கல் மற்றும் அறிவியல் சார்ந்த பயிர் மேலாண்மை முறைகள் விவசாயிகளைச் சென்றடைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

காய்கறிகள், பழங்கள், மலர்கள், பால் மற்றும் பிற விரைவில் அழுகக்கூடிய வேளாண் விளைபொருட்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான சேமிப்பு வசதிகள், குளிர்பதனக் கிடங்குகள், பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் எடுத்துரைத்தார். வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதுடன், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைத்து, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய சந்தை மதிப்பைப் பெற்றுத்தருவதும் முக்கியமானது என்று தெரிவித்தார். அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆய்வகங்களுடன் நின்றுவிடாமல் விவசாயிகளின் வயல்களைச் சென்றடைந்து நடைமுறைப் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என்ற அவரது கருத்து பங்கேற்பாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

பாரதிதாசன் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியரும் துணைவேந்தர் குழு உறுப்பினருமான முனைவர் வேலு ராஜேஷ் கண்ணன் மற்றும் சவுதி அரேபியாவிலுள்ள Front End Limited Company நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியும் வேளாண் நிபுணருமான முனைவர் சி. ரவீந்தர் சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினர்.

மேலும் முனைவர் எஸ். ராஜாராம், முனைவர் ஏ. மகிமா சாந்தி, முனைவர் வி. ரகுநாதன், முனைவர் கே. சி. சிவபாலன் மற்றும் GERC தலைவர் முனைவர் ஆர். சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

வேளாண் அறிவியல் புல முதல்வர் முனைவர் கே. சோழன், பேராசிரியர் முனைவர் அ. பால் பாண்டி மற்றும் பேராசிரியர் முனைவர் எம். டேனியல் ஜெபராஜ் ஆகியோர் அனைவரையும் வரவேற்று நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர். கருத்தரங்கின் இணை ஒருங்கிணைப்பாளர்களாக முனைவர் வி. பி. தினேஷ், முனைவர் எம். வெங்கட்ராமன் மற்றும் முனைவர் ஆர். மங்கையர்க்கரசி ஆகியோர் ஆய்வாளர்களுடன் இணைந்து சிறப்பாகச் செயல்பட்டனர்.

மொத்தம் 12 ஆய்வுக் கருப்பொருள்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இக்கருத்தரங்கில், முதல் நாளில் பெரும்பாலான கருப்பொருள்கள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளபுத்தகமாக வெளிட்டனர் , நிபுணர் உரைகள் மற்றும் அறிவியல் கலந்துரையாடல்களும் நடைபெற்றன. மீதமுள்ள கருப்பொருள்கள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைச் சமர்ப்பிப்புகள் மற்றும் தொழில்நுட்ப அமர்வுகள் இரண்டாம் நாளிலும் தொடர்ந்து நடைபெறுகின்றன.

பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.