ரூ.675 கோடி மெத்தாபெட்டமைன் பறிமுதல்! தவெக நிர்வாகி கைது!
தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் உயர்தர போதைப்பொருளான மெத்தாபெட்டமைன் 135 கிலோ TVK -ன் நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன் என்பவர் வீட்டில் இருந்து நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் Directorate of Revenue Intelligence அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மெத்-ன் இந்திய சந்தை மதிப்பு ஒரு கிலோ ரூ.5 கோடி வரை விற்பனையாகிறது..
அப்படியென்றால், பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப்பொருளின் மதிப்பு ரூ.675 கோடி ரூபாய் இவ்வளவு பெரிய ஸ்டாக் எங்கிருந்து வந்தது ?
யாருக்கெல்லாம் விற்பனை செய்துள்ளனர்/செய்ய திட்டமிட்டிருந்தனர் என Narcotics Control Bureau, Chennai முழுமையாக விசாரிக்க வேண்டும். இந்த சோதனை மற்றும் பறிமுதல் குறித்து @FinMinIndia , DRI விரிவான Press Release வெளியிட வேண்டும்.

ரூ.675 கோடி மதிப்பிலான மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதலுக்கு பின்னால் இருக்கும் சட்டவிரோத பணப்பரிமாற்ற விவகாரம் குறித்து அமலாக்கத்துறை இயக்குநரகம் விசாரணை நடத்த வேண்டியது மிகவும் அவசியம். கைது செய்யப்பட்டுள்ள பூபாலன் தவெக-வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
— அரவிந்தாக்ஷன், பத்திரிகையாளர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.