ரஜினி மீது பாய்ந்து பிராண்டிய ரஜினி பட [மாஜி] டைரக்டர்!
‘மங்கி மைண்ட்ஸ் எண்டெர்டெய்ன்மெண்ட்’ சிவக்குமார் தயாரித்துள்ள படம் ’லவ் 3.0’. இன்ஸ்டா ஃபேமஸான ‘ரீல்ஸ் அக்கா’ ஆர்னிகா கதை-திரைக்கதை-வசனம்-பாடல்கள், ஆர்ட் டைரக்டர், காஸ்ட்யூம் டிசைனர் என சகல டிபார்ட்மெண்டுகளிலும் கலக்கியிருப்பதுடன் டைரக்ட் பண்ணி ஹீரோயினாகவும் நடித்துள்ளார்.
படத்தின் ஹீரோ ’கோயம்புத்தூர் மாப்ள’, இன்னொரு ஹீரோ ‘ஸ்மைலி’ கார்த்திகேயன் உட்பட இதில் நடித்திருக்கும் எல்லோரும் இன்ஸ்டா பிரபலங்கள் தான். ஏ.ஐ.டெக்னாலஜியுடன் இப்படம் உருவாகியுள்ளதால், படத்தின் பாடல்களையோ, டிரைலரையோ தற்போதைக்கு வெளியிட முடியாததால் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் அக்.28-ஆம் தேதி காலை நடந்தது.
இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் சினிமா டைரக்டர்கள் சங்கச் செயலாளார் டைரக்டர் ஆர்.வி.உதயகுமார், பொருளாளர் பேரரசு, நடிகை வனிதா விஜயகுமார், காமெடி பீஸ் கூல் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முதலில் பேசினார் ஆர்னிகா, “இந்தப் படத்தின் முக்கிய உள்ளடக்கமே ஏ.ஐ தான். ஏ.ஐ.யில் உருவான இளம் பெண்ணை ஹீரோ காதலிக்கிறான். அவர்களின் காதல் கல்யாணத்தில் முடிகிறதா? பிரிவில் முடிகிறதா? என்பது தான் கதை. இது மட்டுமல்ல, 1990-களில், அதன் பின் 2000-ல், இப்போது ஜென் ஸி வரை மட்டுமல்ல, எதிர்காலத்தில் காதல் எப்படி இருக்கும் என்பதை அழகாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லியுள்ளோம்.

இங்கே நடக்கும் அனைத்து வகை காதல்களையும் பார்த்துவிட்டு கைலாயத்திலிருந்து பரமசிவனும் பார்வதியும் இறங்கி வந்து அதற்கு என்ன தீர்வு சொல்கிறார்கள் என்பதையும் சொல்லியுள்ளோம். அதற்காக இது ஒரு மதம் சார்ந்த படம் என நினைக்க வேண்டாம். நடிகையாவதற்கு பல முயற்சிகள் செய்து எதுவுமே ஒர்க்-அவுட்டாகதால் தான் இந்தப் படத்தை டைரக்ட் பண்ணி ஹீரோயினாகவும் நடித்து அனைத்து வேலைகளையும் மகிழ்ச்சியுடன் செய்து முடித்துள்ளேன். இனிமேல் எங்களின் எதிர்காலம் மீடியாக்களின் கைகளில் தான் உள்ளது” என மிகத் தெளிவாகவும் தன்னம்பிக்கையுடனும் பேசினார்.
இரண்டே வரிகளில் ரத்னச் சுருக்கமாகப் பேசினார் தயாரிப்பாளர் சிவக்குமார்.
எல்லா சினிமா மேடைகளிலும் தியேட்டர்களிலும் ஏதாவது கிறுக்குத்தனமாக, கேணத்தனமாகப் பேசும் காமெடி பீஸ் கூல் சுரேஷ், இந்த நிகழ்ச்சியில் அந்த மாதிரி பேசாதது பெரிய நிம்மதி.
டைரக்டர் ஆர்.வி.உதயகுமார், “பாகவதர் காலத்து காதல், எம்.ஜி.ஆர்.-சிவாஜி காலத்து காதல், ரஜினி—கமல் காலத்து காதல் இதையெலாம் பார்த்த நாம் இப்ப இன்ஸ்டா இன்ஃபுளூயன்ஸர்களின் காதலைப் பார்க்கப் போறோம். ஜென் ஸி களுக்கு இந்தப் படம் கண்டிப்பா பிடிக்கும்” எனப் பேசிவிட்டு படத்தில் நடித்திருக்கும் புதுமுகங்களையும் வாழ்த்திப் பேசிவிட்டு, “இப்பல்லாம் சினிமாக்களில் வில்லன்களைவிட ஹீரோக்கள் தான் அதிக கொலைகள் பண்ணுகிறார்கள். இப்பக்கூட ஒரு படம் மெகா ஹிட்டாகியிருக்கு. அதுல ஹீரோ கொலைகள் பண்றது மட்டுமல்ல, மலையாளத்திலிருந்து, கன்னடத்திலிருந்து பெரிய ஹீரோக்களைக் கூட்டி வந்து கொலைகள் பண்ணச் சொல்றாரு. இது எதுல போய்முடியுமோ?” என ‘ஜெயிலர்’2’ படத்தையும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேரையும் சொல்லாமல் பாய்ந்து பிராண்டினார்.
ஏன்னா கோமாளி முதல்வர் ஜோசப்பின் கட்சியில் சமீபத்தில் சேர்ந்த சினிமா தற்குறி தான் ஆர்.வி.உதயகுமாரின் புதுப்பாசம், விசுவாசம்-வேசம்.
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.