வேட்டைக்காரன் அஸ்ரா கர்க் !
Honest to the core என்ற ISO தரப்பட்டியலில் இருக்கும் IPS அதிகாரிகளில் தனி இடம். சர்வீசில் வேகத்தடைகளாக வலம் வரும் , Pressure களை புறந்தள்ளி விட்டு , இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டே இருப்பார்கள். இந்த வணங்காமுடியை யாராலும் விலை பேசி , வழிக்கு கொண்டு வர முடியாது. வேலையில் வெளுத்து வாங்குவார்.
சட்டம் ஒழுங்கில் இருந்த போது , விபச்சாரம் (Brothel DEN). சூதாட்டம் (Gambling DEN). சிங்கிள் டிஜிட் லாட்டரி, போதை வஸ்துக்கள், கலப்பட ஆயில், ஹவாலா பண பரிவர்த்தனை, மிரட்டி பணம் பறித்தல், ரவுடிகள், அதில் முதுகலை பட்டம் பெற்ற தாதாக்கள் என்று வரிசை கட்டி நிற்கும் சவாலான குற்றங்களையும் , குற்றவாளிகளையும் சரணமே தெரியாமல் சமாதியாக்கி விடுவார்.
அஸ்ரா கர்க் எங்கு , எந்த நேரத்தில் எப்படி பிரசன்னமாவார் என்பதை புரிந்து கொள்ள முடியாமல், பதட்டம் பலரையும் ஆட்டிப் படைக்கும். மதுரையில் இருந்தபோது குவாரி, கிரானைட் கொள்ளையர்களின் (அரசியல்வாதிகள்) முகமூடியை கிழித்தெறிந்து அவர்களது நிஜ முகங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வேட்டைக்காரன் அஸ்ரா கர்க்.
வால் பிடித்து வாழ்வதைவிட VRS- இல் ( விருப்ப ஓய்வு ) விலகி செல்வதே மேலென்ற வீரியம் இருக்கும். இவரிடம். மாவட்டங்களை கண்காணிக்கும் (Supervising Cadre) பதவி தான் என்ற போதிலும் , கேபினில் அமர்ந்து கொண்டு வெறும் மைக் இன்ஸட்ரக்க்ஷனோடு வேலையை முடித்துக் கொள்ளும் சராசரி IPS அதிகாரிகளிடமிருந்து விலகி நிற்கும் வித்தியாசமானவர்கள் இவர்.
இவரை கண்டாலே கிலி ஆட்டிப்படைக்கும் கீழுள்ள கிரிமினல் குணங்கொண்ட அதிகாரிகளை. அப்பேர்பட்ட பயத்தை கொடுப்பவர் தான் ஒரு கடுமையான அதிகாரி. அப்பேர்பட்ட ஒருவர் தான் இன்று மாநில உளவுத்துறையில் மாமன்னன் என்ற அரியணையில் அமர்ந்திருக்கிறார்.
பல IGP க்கள் இதை கட்டியாண்டு இருக்கிறார்கள். ஆனால், இவரை போல பணியில் ஈடுபாடும் , அர்ப்பணிப்பும் கொண்ட IPS அதிகாரியை அதிசயமாய் பார்த்த முதல்வர் , உளவு பிரிவின் கூடுதல் டிஜிபிக்கான அதிகாரத்தையும் அஸ்ரா கர்க்கிற்கு கூடுதலாக கொடுத்திருகிறார். இது இவரது ஆற்றலுக்கு கிடைத்த அங்கீகாரம். எங்கு தூக்கியடித்தாலும் துவண்டு விடமாட்டார். சென்ற இடத்தை சீர்தூக்கி நிறுத்தும் சாணக்கியன் இந்த சீனியர் ஐபிஎஸ் அதிகாரி.
நேர்மையையும், நெஞ்சுரத்தையும் , வேகத்தையும், விவேகத்தையும் கவச குண்டலங்களாக கொண்டவர் இந்த உளவுத்துறையின் தானை தளபதி .
— இந்திரஜித்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.