தீபாவளி பண்டிகை 311 பேருக்கு புத்தாடை, இனிப்பு மற்றும் குடை வழங்கும் விழா!
திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் மற்றும் ஜெயலக்ஷ்மி சுமதி சஹஸ்ரநாமம் கல்வி அறக்கட்டளை இணைந்து, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வஸ்திரம், இனிப்பு மற்றும் குடை வழங்கும் விழா சின்ன சௌராஷ்ட்ரா தெருவில் உள்ள ஸிந்தி சேட்டு கோவிலில் நடத்தின.
இவ்விழாவிற்கு திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கத் தலைவர் மகேஷ் மற்றும் ஜெயலக்ஷ்மி சுமதி சஹஸ்ரநாமம் கல்வி அறக்கட்டளையின் தலைவர், டேட்டா சயின்டிஸ்ட் சஹஸ்ரநாமன் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்கச் செயலாளர் அம்சராம் வரவேற்புரை ஆற்றினார்.
சங்கத் துணைத்தலைவர்கள் முரளிதரன், ராம்பிரசாத், வினோத் மற்றும் துணைச் செயலாளர்கள் சீனிவாசன், வெங்கடேசன், ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சௌராஷ்ட்ரா மத்திய சபைத் தலைவர் சுரேந்திரன் (பாபு), சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மத்திய அரசு வழக்கறிஞர் கோபிநாதன், திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சுதர்ஸன் ஆகியோர் தலைமை விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். மேலும், அங்கியா சம்வித்யா தேவி கள்
நினைவு கல்வி அறக்கட்டளை தலைவர் துளசிராமன், திருச்சி சௌராஷ்ட்ரா சபைத் தலைவர் ஜெனார்த்தனன், சௌராஷ்ட்ரா மத்திய சபை பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில் 235 மகளிருக்கு இனிப்பு, சேலை, துண்டு மற்றும் குடை ஆகியவையும், 76 ஆண்களுக்கு இனிப்பு, வேஷ்டி, சட்டை, துண்டு மற்றும் குடை ஆகியவையும் வழங்கப்பட்டன. மொத்தம் 311 பேருக்கு தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் புத்தாடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் சமூக முக்கியப் பிரமுகர்களான வரதாச்சாரி, கோவிந்தன், சூரியமூர்த்தி, பேராசிரியர் ரெங்கநாதன், பெருமாள், உமாபதி, ஜெயக்குமார், ராஜன், ராஜேந்திரன், LIC K. சங்கர், வீரேந்திரன் ராம்குமார், பாஸ்கர், செந்தில்குமார், கண்ணா, மோதிலால்,,மற்றும் சங்க இயக்குநர்கள் சூர்யா, தினேஷ், மணிமாறன், சீனிவாசன், வினோத்கண்ணா, வசந்த் உள்ளிட்ட ஏராளமான சமூகப் பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் பொருளாளர் ஹரிஹரன் நன்றியுரை ஆற்றினார். இதனையடுத்து விழா இனிதே நிறைவடைந்தது.
தீபாவளித் திருநாளை முன்னிட்டு சமூகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களின் மகிழ்ச்சியில் பங்கெடுக்கும் வகையில் நடைபெற்ற இந்நலத்திட்ட விழா அனைவரின் பாராட்டையும் பெற்றது.






Comments are closed, but trackbacks and pingbacks are open.