வி .சே .வுக்கு போடு ஒரு “ஜே ”
வள்ளலார் வேலை வாய்ப்புச் சேவை இயக்கம், துளி அறக்கட்டளை இவற்றுடன் இணை ந்து நடிகர் விஜய் சேதுபதி நற்பணி மன்றம் சமுதாயத்தின் நலிவுற்றவர்கள், வேலை வாய்ப்புத் தேடி அலையும் இளைஞர்கள், ஏழைப் பெண்கள் ஆகியோருக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. ’மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் நேரடிக் கண்காணிப்பில் இந்தப் பணிகள் நடந்து வருகின்றன. அந்த வரிசையி ல் தென்கா சி மாவட்டம் ஆயக்குடி உள்ள சேனைத்தலைவர் மண்டபத்தில் 200 முதியோர்கள், குழந்தைகளுக்கு தீ பாவளி ஆடைகள், இனிப்புகள் வழங்கப்பட்டது. அத்துடன் ‘நர்ஸிங் ஸ்டேஷன் ஹெல்த் கேர்’ மற்றும் தமிழ் மண் அறக்கட்டளை உதவியுடன் மிகப்பெ ரிய இலவச மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது.

இதில் அனைத்து வகை உயர்தர பரிசோதனைகள் நடத்தப்பட்டு மருந்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டன். அஜித்குமார் ரவீந்தி ரன், சிவாஜி பிரபாகர், ஜெய்பாலா ஆகியோ ர் இணைந்து இந்த மகிழ்வான நிகழ்வை முன்னெடுத்தனர். இப்போது கூடுதல் மகிழ்ச்சியாக, தமிழர்கள் பெருமைப்படும் சேதி ஒன்றும் வெளியாகியுள்ளது.
அதாவது அமெரிக்காவின் நியூயார்க் நகரி ல் ஆண்டு தோறும் நடக்கும் இண்டெ ர்நேஷனல் எம்மி விருது விழாவில் இந்த ஆண்டு மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் கைகளால் விருது வழங்க, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நவம்பர் 23-ஆம் தே தி நடக்கும் இவ்விழாவில் தேர்வானவர்களுக்கு விருது வழங்குவதுடன், சில நிமிடங்கள் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார் விஜய் சேதுபதி . இதற்கு முன்பு 2016-ல் நடந்த விருது விழாவில் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா வும், 2024-ல் இந்தி காமெடி நடிகர் வீர்தாஸும் விருதுகளை வழங்கினார்கள்.
இந்தியாவி ன் மூன்றாவது நபராக இந்த ஆண்டு தமிழன் விஜய் சேதுபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மிகவும் பெருமைக்குரியது என்பதி ல் எந்த சந்தேகமுமில்லை .
– ஆண்டவர்





Comments are closed, but trackbacks and pingbacks are open.