அங்குசம் பார்வையில் ‘இராமாயணா -பகுதி -1’
இந்திய மக்களில் ஆன்மீக அன்பர்களி ன் மனதி ல் எப்போதும் அசை போடும் இதிகாசக் கதைகளி ல் இராமாயணத்திற்குத் தான் முதல் இடம். நாடகம், தெருக்கூத்து, பாவைக் கூத்து, வில்லுப்பாட்டு, கதா காலட்சேபம், சி னிமா, ரேடியோ , டிவி என பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஒலி வடிவம், காட்சி
வடிவங்களில் இராமாயணக் கதைகளைக் கேட்டாலும் பார்த்தாலும் பெரும்பான்மை இந்துமதத்தினருக்கு சலிப்பே ஏற்படுவதில்லை .
40 ஆண்டுகளுக்கு முன்பு ராமானந்த சாகரின் இராமாயணம் தூர்தர்ஷனி ல் ஒளிபரப்பான போது இந்தியாவே அதிசயத்துப் பார்த்தது.
அதன் பின் இந்தி , தெலுங்கு சி னிமாக்களில் அவ்வப்போது இராமாயணக் கதைகள் வருவதுண்டு. வந்த சுவடு தெரியாமல் போனதுமுண்டு. இப்போது கம்ப்யூட்டர் டெக்னாலஜி யும் ஏஐ டெக்னாலஜி யும் அபாரமாக வளர்ந்திருப்பதை பயன்படுத்தி இந்தி சினிமாவின் பிரபல தயாரி ப்பாளர் நமித் மல்ஹோத்ராவும் கன்னட ஹீ ரோ யஷ்ஷும் இணைந்து ‘இராமாயணா பகுதி -1’ ஐ அகி ல இந்திய சி னிமாவா களம் இறக்கியி ருக்கிறார்கள்.
இராமாயணம் என்பது கட்டுக்கதை , கற்பனைக் கதை என்பதில் எந்த சந்தே கமுமில்லை . ஆனால் வடக்கே வால்மீகி எழுதிய இராமாயணத்தை விட, இங்கே கம்பன் எழுதிய இராமாயணம் தான் சுவை மிக்கது, ரசனை மிக்கது. ஆனால் இந்தி வாலாக்களுக்கு வால்மீகி தான் பெஸ்ட் ரைட்டர் என்ற நினைப்பு எப்போதும் மனதில் இருக்கும்.
இந்த தீபா வளி யை முன்னிட்டு ரிலீசாகியிருக்கும் இராமாயணா முதல் பகுதி கூட வால்மீகி எழுதியதை வைத்து உருவான லேட்டஸ்ட் டெக்னாலஜி சினிமாதா ன். இதை நிதேஷ் திவாரி இயக்கியிருக்கிறா ர்.
இராமனா கரன்பீ ர் கபூர், சீதையாக சாய் பல்லவி , லட்சுமணனாக ரவி துபே , இராவணனா கயஷ், சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத்சிங், மண்டோ தரியாக காஜல் அகர்வால், என இந்தி [ய] சி னிமாவின் பிரபலமான நடிகர்-நடிகைகள் நடித்திருக்கிறார்கள். ராமானந்த சாகரின் இராமாயணத்தில் இராமனாக நடித்த அருண்கோவி ல், இதில் ராமனின் அப்பா தசரதனாக புரமோஷன் ஆகியுள்ளார்.
ராமன் சாதாரண மனிதனா ? மன்னனா ? கடவுளா ? என்பதற்கு இதுவரை யாரும் சரி யான விடை சொல்லவில்லை . அவரவர்களுக்குத் தோன்றியதை அளந்துவிடுவார்கள், அதைப் பலரும் நம்புவா ர்கள். அதைப்பற்றி நாம் விரிவா அலசினால் விரசமாகிவிடும். அதனால் இப்போது ரிலீசாகியுள்ள லேட்டஸ்ட் இராமாயணத்தைப் பத்திப் பார்ப்போம். கதை உலகமறி ந்த கதைதான். அதை இந்திய சினிமாவிலேயே உச்சபட்ச கம்ப்யூட்டர் டெக்னாலஜியை டைரக்டர் நிதேஷ் திவா ரி பயன்படுத்தி சாகசம் புரிந்துள்ளார். அதை 3டியி ல் பார்ப்பது சிலிர்ப்பு மற்றும் பரவச அனுபவம். அதை வி ட
இன்னும் ஓர் அதி சயம், அற்புதம் என்னன்னா … படத்தி ல் நடித்தவர்கள் அனை வருமே வே ற்று மொ ழி நடிகர்- நடிகை கள் என்றா லும் ஏஐ மூலம் தமிழ் வசனங்களை மிகச்சரி யா க லிங்க்-சி ங்க் பண்ணியிருப்பது தா ன். ராமன் ரன்பீ ர்கபூர் தேமே என வந்து நிற்கி றார், லைட்டாக கழுத்தை தி ருப்புகிறா ர், போகி றார். சீதை கேரக்டருக்கு சா ய்பல்லவி மிகச்சரியான தேர்வு. இப்படத்தி ற்குப் பி றகு இந்தி சினிமாவி ல் மிகப்பெரிய சான்ஸ்கள் சாய்பல்லவி க்கு வரிசை கட்டி நிற்கும்.
படத்தி ன் டாப் ஹீரோ , இரா வணன் யஷ் தா ன். மனுஷனி ன் உடல்மொ ழி , வசனம் பேசும் போது கம்பீரம் என மிரட்டுகிறார். இந்த முதல் பாகத்தி ல் இராவணன் ராஜ்ஜியம்தான். இரண்டாம் பாகத்தில் இராவணனை என்ன செய்யக் காத்திருக்கிறார்களோ …? பங்கஜ்குமார் & மகேஷ்லிமாயே ஆகிய இருவரி ன் ஒளி ப்பதி வு, ஹா ன்ஸ் ஜி ம்மர் & ஏ.ஆர்.ரஹ்மானி ன் பின்னணி இசை இந்த இராமாயணாவை ரொம்பவே ரசிக்க வைக்கின்றன.
அங்குசம் பா ர்வை யி ல் ‘இரா மாயணா -பகுதி -1’ 58/100
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.