அம்பா சமுத்திரத்தில் திமுக – அதிமுக கூட்டணி ?

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

அம்பாசமுத்திரம் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரவிருக்கும் இடைத்தேர்தல், திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சியின் காரணமாக செயற்கையாக உருவாக்கப்பட்டது. இத்தொகுதியில் திமுக மற்றும் அதிமுக ஆகிய முதன்மையான எதிர்க் கட்சிகள் இணைந்து ஒரு பொது வேட்பாளர் போட்டியிடச் செய்யலாம் என்ற செய்திகள் பரபரப்பாகப் பேசப்படுகின்றன.

பாஜகவின் முகமூடி சதி அரசியல் :

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

தமிழ்நாட்டில் காங்கிரஸ் வீழ்த்தப்பட்டு பேரறிஞர் அண்ணா தலைமையில் திராவிட இயக்க ஆட்சி 1967 இல் மலர்ந்தது. இதன் தொடர்ச்சியாக கலைஞர் தலைமையில் திராவிட இயக்க ஆட்சி தொடர்ந்தது.

மு க ஸ்டாலின்
மு க ஸ்டாலின்

மாநில உரிமை, சனாதன எதிர்ப்பு, பெண்களின் உரிமைகள், தாய்மொழி பாதுகாப்பு, போன்ற அடிப்படைக் கொள்கைகளை திமுக ஆட்சியில் கலைஞர் அவர்கள் நடைமுறைப்படுத்தினார். இந்திய வல்லாதிக்க ஒன்றிய அரசுக்கும் இந்தித் திணிப்புக்கும் மதவாத, சாதிய வாத அடக்குமுறைகளுக்கும் எதிர்ப்பு சக்தியாக திமுக அரசு திகழ்ந்தது. இந்தக் கொள்கைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த அன்றைய காங்கிரஸ் ஒன்றிய அரசு தடையாக இருந்தது.

பிளவு படுத்தியது :

இதன் விளைவாக வெகு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த திரைப்பட நடிகர் எம்ஜிஆர் அவர்கள் மூலம் திமுகவை இரண்டாகப் பிளந்தது ஒன்றிய அதிகாரத்தைக் கொண்டிருந்த காங்கிரஸ். எம்ஜிஆரைத் தொடர்ந்து செல்வி ஜெயலலிதா தமிழ்நாட்டில் ஆட்சி நடத்த இந்திரா காந்தியைத் தொடர்ந்து ராஜிவ் காந்தியும் ஆதரவாக இருந்தனர்.

இந்திராகாந்தி அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி அனைத்து ஜனநாயக நெறிமுறைகளையும் அரசியல் சட்ட  உரிமைகளையும் காலில் போட்டு மிதித்துப் பேயாட்டம் ஆடினார். இந்தக் கொடுமைகளை துணிந்து நின்று எதிர்த்தது கலைஞர் தலைமையிலான திமுக. எம்.ஜி.ஆர். அவசர நிலைக் கொடுமைகளை ஆதரித்து கட்சியின் பெயரில் அனைத்து இந்திய என்று சேர்த்துக் கொண்டார்.

மீண்டும் பிளவு :

வைகோ-வை பயன்படுத்தி மீண்டும் தி.மு.க.வை பிளவு படுத்தியது ஒன்றிய அரசின் உளவுத் துறை. இந்த இரண்டு பிளவுகளும் தி.மு.க.வை அழித்துவிடும் என்று சனாதன சக்திகள் கனவு கண்டன.

இப்போது பாஜக :

பா.ஜ.க.வின் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளைத் தமிழ்நாட்டில் மட்டும் திணிக்க முடியவில்லை. இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழ்நாடு மட்டும் தனித்துப் பயணிக்கிறது. மேலும், 2021-2026 தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முதலிடத்தை அடைந்தது. இப்படியே விட்டால் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் நிரந்தரமாகிவிடும் என்ற அச்சத்தில் பாஜக உருவாக்கிய அரசியல் சதியால் திமுக – அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகள் தோற்கடிக்கப்பட்டன. ஆனால், இவை மிகக் கடுமையானத் தோல்வியைத் தழுவ வில்லை. இந்நிலையில் குறைந்த இடங்களையே பிடித்தப் புதியக் கட்சி ஆட்சியைப் பிடித்துத் தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கிறது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

ஆளும் கட்சியின் பக்கம் இருந்தால் லாபம் என்று கருதிய, திமுகவின் முன்னாள் கூட்டணிக் கட்சிகள் புதிய ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து வருகின்றன.

வரலாற்றில் திமுகவை ஒழிக்கக் காங்கிரஸ் கட்சிக்கு உறுதுணையாக இருந்தது கம்யூனிஸ்ட் கட்சிகள். எனவே, காங்கிரசோடு சேர்ந்து கொண்டு புதிய ஆட்சியை ஆதரிக்கின்றன. தி.மு.க.வை பிளவுபடுத்திக் கட்சி தொடங்கிய ம.தி.மு.க. தி.மு.க.வுக்கு எதிராக இருப்பதில் ஆச்சரியமில்லை. காலங்காலமாக இஸ்லாமியர்களுக்கு ஆதரவு சக்தியாக இருந்த தி.மு.க.வுக்கு எதிராக முஸ்லிம் லீக் சென்றது சற்று ஆச்சரியம்தான்.

செய்யவேண்டியது என்ன?

இனி திராவிடக் கட்சிகளான தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் சேர்ந்து பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். பதவிகளை முதன்மைப் படுத்தாது கரம் கோர்த்து செயல்படாவிட்டால் பாஜகவும் காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து திராவிடக் கட்சிகள் இரண்டையும் அழித்து விடுவார்கள். தி.மு.க. எதிர்ப்பில் பா.ஜ.க.வைப் போலவே காங்கிரசும் தீவிரமாக உள்ளது. இந்த இடைத் தேர்தல் இப்போது இதற்கான நல் வாய்ப்பாக வந்துள்ளது.

சீமானை நம்பலாமா?!

பின்லேடனை அமெரிக்கா வளர்த்துவிட்டது. பின்னர் அமெரிக்காவுக்கே எதிராக அமைந்தது. இந்த நிலை திராவிடக் கட்சிகளான தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் வந்துவிடக் கூடாது. கடந்த காலத்தில் ஊருக்கு நூறு வாக்குகள் கூட இல்லாத சிறு கட்சிகளுக்கு நாடாளுமன்ற, சட்டமன்ற இடங்களை கொடுத்து வளர்த்துவிட்டதன் விளைவை இன்று தி.மு.க. சந்தித்து வருகிறது.

சீமான்
சீமான்

சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து அவற்றை வளர்ப்பதை தி.மு.க. விட்டுவிட வேண்டும். அப்படி கூட்டணி வைத்தால் அவர்களது சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது.

இந்த அனுபவங்களைக் கொண்டு பார்க்கும் போது வரும் இடைத்தேர்தலில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஒரு உடன்பாடு செய்து கொள்ளலாம். தொகுதிகளைப் பகிர்ந்து கொள்ளலாம். தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் பொது வேட்பாளர்களை போட்டியிடச் செய்யலாம்.

தமிழகன் - Tamilagan
தமிழகன் – Tamilagan

ஆனால், தனது அரசியலில் தி.மு.க.வை மட்டுமல்ல, திராவிட சித்தாந்த்தையும் சனாதன பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கின்ற தந்தை பெரியாரையும் கடுமையாக எதிர்த்து மிக்க கேவலமாகப் பேசுகின்ற சீமான் அவர்களை பொது வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைப்பது தி.மு.க. தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதாகும். சீமான், விஜய், அண்ணாமலை, தனுஷ் முதலியோர் பாஜகவின் தயாரிப்புகளே. எனவே, தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் இதனைக் கவனத்தில் கொண்டு அரசியல் சதுரங்கத்தில் காய்களை எச்சரிக்கையுடன் நகர்த்த வேண்டும்.

—  வழக்கறிஞர் தமிழகன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.