அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட் ! தவெக அரசின் டிஜிட்டல் புரட்சி !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தமிழக அரசு ஊழியர்கள் கம்ப்யூட்டர், இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் வாங்குவதற்காக நீண்ட கால முன்பணம் கேட்டு விண்ணப்பித்தால் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவல நிலை இருந்து வந்தது. இதற்கு காரணம் பழைய நடைமுறையில் பெரும் குழப்பம் இருந்தது. ஊழியர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தவெக அரசு G.O.220 மற்றும் G.O.223-ன் படி IFHRMS மூலம் முழுமையாக தானியங்கி முறையை கொண்டு வந்துள்ளது. இதற்கான Standard Operating Procedure Version 1.0 தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் நோக்கம் ஒப்புதல் ஆணை தயாரிப்பது, பணம் வழங்கும் பதிவு மற்றும் மையப்படுத்தப்பட்ட பட்ஜெட் மாற்றம் ஆகிய அனைத்தையும் தானியங்கியாக மாற்றுவது தான்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

புதிய நடைமுறையின் படி முதலில் ஒப்புதலை தொடங்குபவர் IFHRMS-ல் புதிதாக திறக்கப்பட்டுள்ள பக்கத்தில் நீண்ட கால முன்பணத்திற்கான பதிவை உருவாக்குவார். அதன் பிறகு ஊழியர் விவரம், முன்பண வகை, ஒப்புதல் மற்றும் பணம் வழங்கும் விவரங்களை பதிவு செய்து வரைவு ஒப்புதல் ஆணையின் முன்னோட்டத்தை சரிபார்ப்பார். பின்னர் அதை ஒப்புதல் பணிப்பாய்வுக்கு அனுப்புவார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஒப்புதல் அளிக்கப்பட்ட உடனேயே இங்கு தான் மேஜிக் நடக்கிறது. கணினி அமைப்பே தானாகவே இறுதி ஒப்புதல் ஆணையை உருவாக்கி பணம் வழங்கும் விவரங்களையும் தயார் செய்துவிடும். அதோடு நில்லாமல் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட DDO-வுக்கு மையப்படுத்தப்பட்ட பட்ஜெட் மாற்றத்தையும் அதுவே தொடங்கிவிடும். இதில் இரட்டை பட்ஜெட் ஒதுக்கீடு அல்லது அதிகப்படியான ஒதுக்கீட்டை தடுக்கும் வசதியும் உள்ளது.

இந்த புதிய தானியங்கி முறையால் கைமுறை வேலைகள் முற்றிலும் குறையும், பில் செயலாக்கம் ஜெட் வேகத்தில் நடக்கும், துல்லியம் மற்றும் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும், ஒவ்வொரு நகர்வையும் கண்காணிக்க முடியும். முக்கியமாக நிர்ணயிக்கப்பட்ட ஒப்புதல் வழிமுறை வெற்றிகரமாக முடிந்த பிறகு தான் இறுதி ஆணை, தானியங்கி பணம் வழங்கல் மற்றும் பட்ஜெட் மாற்றம் நடக்கும் என்பதால் இடையில் எந்த முறைகேடும் நடக்க முடியாது.

திமுக ஆட்சியில் இழுத்தடிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் கனவான கம்ப்யூட்டர், பைக், கார் லோனை இனி ஒரே கிளிக்கில் வழங்கும் தவெக அரசின் டிஜிட்டல் புரட்சி இது என ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

—   சரவணன்.சிபி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.