கலைமகள் சபா விவகாரத்தில் அதன் உறுப்பினர்களை அடையாளம் காண்பதே பெரும் சிக்கலாக மாறியிருப்பதை கடந்த பதிவில் பார்த்தோம். இந்த வழக்கை முன் நகர்த்தி செல்லும் கலைமகள் சபாவின் சொற்ப உறுப்பினர்கள் மத்தியிலும்கூட பல்வேறு கேள்விகள் முன் எழுகின்றன. அவர்களாலேயே, என்னதான் நடக்கிறது? இதன் போக்கு என்னவாகும்? என்பதை கணிக்க முடியாத நிலையில்தான் இருக்கிறார்கள்.
இந்த இடைவெளியை போக்க வேண்டியது, தற்போதைய கலைமகள் சபா நிர்வாகத்தின் கடப்பாடுகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது. கலைமகள் சபா உறுப்பினர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு அறக்கட்டளை என்ற பெயரில் தனி அமைப்பை ஏற்படுத்தி, கலைமகள் சபா உறுப்பினர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுவரும் கோவையை சேர்ந்த வழக்கறிஞர் அறிவழகன் சில கேள்விகளை தொகுத்து முன்வைத்திருக்கிறார்.
- கலைமகள் சபா தொடங்கப்பட்ட காலம் முதல் இதுவரை சபாவில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
- செயலற்றவர்கள், இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்?
- ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனிப்பட்ட உறுப்பினர் எண் மற்றும் கணினிமயமாக்கப்பட்ட பதிவு உள்ளதா?
- 11. 01.11.2021 தேதியிட்ட நீதிமன்ற உத்தரவில் 5,33,356 உறுப்பினர்கள் என்றும், 25.09.2025 தேதியிட்ட உத்தரவில் சுமார் 6,50,000 உறுப்பினர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கைகளுக்கு இடையிலான வேறுபாட்டிற்கான காரணம் என்ன?
- சரிபார்க்கப்பட்ட உறுப்பினர் எண்ணிக்கை உறுப்பினர்களின் உரிமைகள், தகுதிகள் மற்றும் உறுப்பினர் நிலவரம் இணையதளத்தில் வெளியிடப்படுமா?
- சபாவின் பெயரில் உள்ள ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் தற்போது உள்ள இருப்புத் தொகை எவ்வளவு?
- தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் கலைமகள் சபாவுக்கு சொந்தமாக உள்ள மொத்த சொத்துகள் எத்தனை?
- சபாவுக்கு சொந்தமான மொத்த நிலத்தின் பரப்பளவு எவ்வளவு?
- ஒவ்வொரு சொத்தின் சர்வே எண், கிராமம், வட்டம், மாவட்டம் மற்றும் பரப்பளவு விவரங்கள் அடங்கிய சொத்துப் பதிவேடு உள்ளதா?
- அனைத்து சொத்துகளுக்கும் உரிய பட்டா மற்றும் உரிமை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளனவா?
- சபாவுக்கு சொந்தமான சொத்துகளில் ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துகளை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
- மாவட்ட வாரியாக முழுமையான சொத்துப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படுமா?
கேள்விகள் தொடரும் …
— அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.