Friday, November 27, 2026 | 1:45 PM IST

அங்குசம் பார்வையில் ‘சிட்டுக்குறிஞ்சி’

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தயாரிப்பு: ஜுட் ஆனந்த், டைரக்டர்: வி.ஜே.மீனாட்சி சுந்தரம், ஆர்டிஸ்ட்: ரஜித் மேனன், தீப்ஷிகா, நக் ஷா சரண், ஸ்ரீராம் கார்த்திக், ஜி.எம்.குமார், ராமச்சந்திரன், சுஜாதா, மஞ்சு, ஹலோ கந்தசாமி, தேனி முருகன், கராத்தே ராஜா, ஒளிப்பதிவு: பிரான்சிஸ் ராஜ்குமார், இசை: மாறா, எடிட்டிங்: மகேந்திரன் கணேசன், பிஆர்ஓ: ரியாஸ் அகமது & பாரஸ் ரியாஸ்

அதிகாலையில் வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டில் இருந்து கொடைக்கானல் பூம்பாறைக்கு பஸ் ஏறுகிறார் கேரளம் கொச்சியைச்  சேர்ந்த பறவைகள் ஆராய்ச்சியாளரான ஹீரோ ரஜித் மேனன். அங்கே உள்ள கெஸ்ட் ஹவுஸ் சாவி இல்லாததால் நக் ஷா சரண் வீட்டில் சில மணி நேரம் தங்க வைக்கிறார் ரேஞ்சர். அப்போது நக் ஷாவின் கணவன் வெளியூர் போயிருக்கும் நேரம் அது. நக் ஷாவின் அன்பிலும் அழகிலும் மயங்கிய ரஜித் மேனன், இரவில் அணுக, ஆவேசமாகிறார் நக் ஷா. இந்த குற்ற உணர்ச்சியால் அந்த இரவே அங்கிருந்து வெளியேறி….கொச்சிக்குச் செல்கிறார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

சிட்டுக்குறிஞ்சிஅங்கே தனது நண்பனிடம் பூம்பாறையில் நடந்ததைச் சொல்கிறார். அந்தப் பெண்ணைத் தேடி மீண்டும் பூம்பாறை வருகிறார்கள். அதே பெண்ணை பஸ்ஸில் பார்க்கிறார், விரட்டிப் போகிறார். ஊராரிடம் மாட்டிக் கொள்கிறார். அப்படி ஓர் பெண்ணே இல்லை, நீ சொல்லும் இடத்தில் வீடே இல்லை என்கிறார்கள். இவர் அப்போது பார்த்த ஆட்கள் யாருமே இவரைத் தெரியாது என்கிறார்கள். அதுக்குப் பிறகு என்ன நடந்தது? இதான் இந்த ‘சிட்டுக் குறிஞ்சி’.

இடைவேளை வரை படம் டெட் ஸ்லோவாகத் தான் போகுது. அது தெரியாத அளவுக்கு நக் ஷாவின் அழகும் நடிப்பும் சமாளிக்கின்றது. இடைவேளைக்குப் பிறகு நாவலாசிரியர் ஸ்ரீராம் கார்த்திக் மூலமும் அதைக் கேட்கும் தீப்ஷிகா மூலமும் நெல்லூரிலிருந்து கதையை ஆரம்பிக்கிறார் டைரக்டர் மீனாட்சி சுந்தரம். ‘சிட்டுக்குறிஞ்சி என்ற அழகிய மலை கிராமத்தில் கதை நடப்பதாக சொல்கிறார் ஸ்ரீராம் கார்த்திக். இங்கே பட்டரை ராமச்சந்திரனை சந்திக்கும் ரஜித்துக்கு….1983-ல் நடந்த உண்மைச் சம்பவம் தெரிகிறது. அதில் வரும் ஆணும் பெண்ணும் ரஜித் – தீப்ஷிகா போல இருக்கிறார்கள், காதலிக்கிறார்கள். சாதி வெறி துரத்த இங்கே சிட்டுக் குறிஞ்சிக்கு வந்து ஊர்த் தலைவர் ஜி எம் குமாரிடம் அடைக்கலம் ஆகிறார்கள். இருவருக்கும் கல்யாணம் செய்து வைக்கிறார் ஜி.எம்.குமார். அவர்களின் மகிழ்ச்சி வாழ்வில் சாதி வெறியர்கள் புகுந்து தீப்ஷிகாவை வெட்டிச் சாய்க்கிறார்கள்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

சிட்டுக்குறிஞ்சிஇப்படியே ஆந்திராவின் நெல்லூரிலும் இங்கே சிட்டுக் குறிஞ்சியிலும் மாறி மாறி பயணிக்குது கதை. இது மறு ஜென்மக் கதையா?ன்னு நாம குழம்பு போது…1983-ல் நடந்த சம்பவம் என தினத்தந்தி பேப்பர் செய்தியைக் காட்டி கிறுகிறுக்க வைத்துவிட்டார் டைரக்டர் மீனாட்சி சுந்தரம்.  படத்தில் நடித்தவர்கள் ( குறிப்பாக தீப்ஷிகா வெட்டிச் சாய்க்கப்பட்டதும் கதறித் துடிக்கும் ஜி.எம்.குமார்) எல்லோருமே நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் கதையை டைரக்டர் கொண்டு போன விதம் தான் மெகா குழப்பம். மலைப்பகுதிகளில் கேமரா மேன் பிரான்ஸின் உழைப்பு தெரிகிறது.

அப்பப்ப டி.எம்.செளந்தர் ராஜனின் முருகன் பாடல்கள் மியூசிக் டைரக்டர் மாறாவுக்கு கை கொடுத்துள்ளது. ஆனா படத்துக்கு முருகன் கை கொடுப்பாரான்னு தெரியாது. ஏன்னா இப்ப முருகன் பாடே பெரும்பாடாக இருக்கு.  படத்தில் மத்த சங்கதிகளையாவது சகிச்சிக்கிரலாம் மக்களே…‌‌ ஹீரோ ரஜித் மேனனும் அவர் ஃபிரண்டும் மலையாளத்தில் பேசுவதை தமிழ் சப் டைட்டில் போட்டாய்ங்க பாருங்க…அவய்ங்களை எதால் அடிப்பதுன்னு தெரியல. உதாரணமாக ‘நான் சொன்னேன், இவன் கேட்கலை’. இதை நொன் செநான் கெகீலன்னு தமிழ் டைப் அடிச்சவனை என்ன செய்றது? படத்தில் ரஜித் பேசும் எல்லா சீனிலும் இந்த கேவலம் தான். அப்படின்னா தமிழ் சப் டைட்டிலை டைரக்டர் பார்க்லையா? இல்ல தமிழே தெரியலையா? இல்ல தமிழ் தெரிஞ்ச எவனும் பார்க்கலையா? இவய்ங்களுக்கு எவ்வளவு திமிர் இருந்தா இவ்வளவு கேவலமா தமிழில் சப் டைட்டில் போடுவாய்ங்க.

அங்குசம் பார்வையில் ‘சிட்டுக்குறிஞ்சி’ 39/100 

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.